Header Ads



எனக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது - கோத்தபாய ராஜபக்ச

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். வார இறுதி சிங்கள ஊடகமொன்றுக்கு கோத்தபாய ராஜபக்ச நேர்காணல் வழங்கியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்றே மற்றும் சில தரப்பினரும் உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். என்னைக் கைது செய்யப் போவதாக சிலர் கூறி வருகின்றனர். இதனால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.

நான் எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதில்லை. எந்த அதிகாரத்தைக் கொண்டு என்னைக் கைது செய்யப் போவதாக அரசியல்வாதிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

அமெரிக்க குடியுரிமை காணப்படுகின்றது. எனினும், நான் அங்கு சென்றால் நிச்சயமாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்.

அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் துரத்தி துரத்தி துன்புறுத்தி வருகின்றது. நான் எந்தக் காலத்திலும் அரசியல் கட்சியொன்றின் உறுப்பினராக இருந்ததில்லை.

எனினும், தற்போதைய நிலைமைகளைக் கருத்திற் கொண்டு அரசியல் கட்சியொன்றில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டு அரசியலில் ஈடுபட நேரிடலாம் என தெரிவித்துள்ளார்

3 comments:

  1. எத்தனை பேரை கொண்டிருப்பீர் எத்தனை பேருக்கு அச்சுருத்தல் விட்டிருப்பீர். வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான்.இது உமக்கு ரொம்ப பொருந்துதையா!

    ReplyDelete
  2. நீங்கள் எத்தனை பேரின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தீர்கள்? எத்தனை உயிர்களை அநியாயமாகக் கொன்றுள்ளீர்கள்? காலம் பதில் சொல்லும். உங்கள் கிறீஸ் மனிதர்கள் எங்கே? வெள்ளை வேன் எங்கே? அவைகளின் பாதுகாப்புகள் எங்கே? நீங்கலெல்லாரும் மனிதர்களா?

    ReplyDelete
  3. தலைவலியும், காய்ச்சலும் தனக்குத் தனக்கு வந்தால்தான் தெரியும்.

    ReplyDelete

Powered by Blogger.