Header Ads



மைத்திரி, ரணில், சந்திரிகா திங்களன்று வடக்கு விஜயம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­ சி­றிசேன, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர ­துங்க, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் எதிர்­வரும் 23ஆம் திகதி வட க்­கிற்கு விஜயம் செய்யவுள்­ளனர்.

25 வரு­டங்­களின் பின்னர் பொது­ மக் கள் பார்­வை­யிட அனு­ம­திக்­கப்­பட்ட வளலாய் பகு­தியை உத்­தி­யோகபூர்­வ­மாக அவர்­க­ளி­டம் கைய­ளிக்கும் நிகழ்வில் பங்­கேற்­ப­தற்­காக இவர்கள் வரு­கை­த­ர­வுள்­ளனர்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் புதிய அர­சாங்கம் அமை­யப்­பெற்­றதன் பின்னர் பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான நிலங்கள் மீண்டும் மக்­க­ளி­டத்தில் கைய­ளிக்­கப்­படும் என கூறப்­பட்­டது. அத்­துடன் வடக்கில் இரா­ணு­வத்தின் உயர்­பா­து­காப்­பபு வல­யங்கள் அமைந்­துள்ள நிலப்­ப­ரப்பில் 1100ஏக்கர் பரப்­ப­ள­வு­டைய நிலப்­ப­ரப்பு பொது­மக்­க­ளி­டத்தில் விரைவில் கைய­ளிக்­கப்­படும் என மிள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தனது யாழ்.விஜ­யத்­தின்­போது உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

அதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டில் ஏற்­பட்ட அசா­த­தா­ரண சூழ்­நி­லை­களால் இடம்­பெ­யர்ந்த இப்­பி­ர­தேச மக்கள் தமது சொந்த நிலங்­களை இழந்­தி­ருந்­தனர். அவற்றை பார்­வை­யி­டு­வ­தற்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர். குறிப்­பாக கோப்பாய் பிர­தேச செய­லாளர் பிரிவின் கீழ் உள்ள வளலாய் கிராம சேவகர் பிரி­வி­லுள்ள 232ஏக்கர் நிலப்­ப­ரப்பு பொது­மக்­களின் பார்­வைக்­காக விடு­விக்­கப்­பட்­ட­துடன் வலி.வடக்கில் அச்­சு­வேலி வயா­விளான் பகு­தியும் மக்­களின் பார்­வைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை குறித்த நிலப்­ப­ரப்­பினை பூர்­வீ­க­மாகக் கொண்ட மக்­க­ளி­டத்தில் அவர்­களின் நிலங்­களை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­கழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில்­விக்­கி­ர­சிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிகழ்வின் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.