தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், தொடர்பில் சிக்கல் நிலை
யாழ்ப்பாணம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழங்களின் உபவேந்தர்கள் தொடர்பிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை நீக்குமாறு விஞ்ஞான பீட விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி பிரபாத் ஜயசிங்க கூறியுள்ளார்.
யாழ் பலக்லைக்கழகத்திற்கான உபவேந்தர் முறையாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் விரிவுரையாளர்கள் வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் பதவிக் காலம் முடிவுக்கு வந்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மூன்று மாதங்களுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சம்மேளனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்
அத்தோடு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு எதிராக அந்தப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் சிலர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வாவிடம் வினவியபோது, யாழ்ப்பல்கலைக்கழகம் தொடர்பில் இதுவரை தமக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை என கூறினார்.
Post a Comment