மஹிந்தவுக்கு, தாய் வீட்டில் இடமில்லை
அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை தொழிலாளர் கட்சியில் போட்டியிடவிருக்கின்றார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏ.எஸ்.பி. லியனகே தலைமையிலான இலங்கை தொழிலாளர் கட்சி தொழிற்படுகின்றது. இவர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தன்னுடைய வேட்மனுவை ஏற்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருதுவதனால், அடுத்த தேர்தலில் இலங்கை தொழிலாளர் கட்சியில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் எதிர்வரும் நாட்களில் நடத்தப்படும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது அறிவிக்கப்படும் என்று லியனகே தெரிவித்தார்.
அதேவேளை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவின் தாய் வீடான சுதந்திரக் கட்சியிலோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலோ மஹிந்த ராஜபக்ஸவுக்கு போட்டியிட அனுமதி வழங்கப்படாத நிலையிலேயே அவர் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருப்பதாகவும், அவ்வாறே விமல் வீரவன்ச உள்ளிட்டவர்களும் போட்டியிடுவர் எனவும் எதிர்பார்க்கப்படுவதுடன், சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைமை பதவிகளை மஹிந்த ராஜபக்ஸ கைப்பறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பேராசை பிடித்த மனிதன், இப்போதாவது இருக்கிற கொஞ்சம் மரியாதையையும் காப்பாற்றிக்கொண்டு ஒதுங்கத் தெரியாமல், பேராசை பிடித்து படியளக்கிறது.
ReplyDelete