ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் சர்ச்சையில்..?
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயற்படுவதாகவும் ஆனால் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் எவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கை கடற்படையினருக்கு அதிகாரம் உள்ளதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ´NDTV´ ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியாவின் ´தந்தி´ ஊடகத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய நேர்காணலில் இந்த கருத்தை தெரிவித்ததால் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் பாதிய எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் வெற்றியளித்துள்ளதாகவும் மோடி இலங்கை மக்களை வெற்றி கொண்டுள்ளதாகவும் மக்களுக்கும் மோடிக்கு பதிலளித்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் எல்லா பகுதிகளிலும் உள்ள கடற்பரப்பில் அத்துமீறுவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிகாரம் இலங்கை கடற்படையினருக்கு உள்ளதாகவும் அதுவொன்றும் புதிதல்ல என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டலை தடுக்க வேண்டும் என கூறியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இந்தியா வடக்கு பகுதியை மாத்திரம் கவனத்தில் கொள்ளாது முழு இலங்கையையும் கவனத்தில் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment