Header Ads



இனவாதத்தை தூண்டி, அதன்மூலம் ஆட்சியை கைப்பற்றும் மஹிந்தவின் நடவடிக்கை மிகுந்த ஆபத்தானது

இனவாதத்தை தூண்டி அதன் ஊடாக ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவா சிறிதுங்க ஜயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் நடவடிக்கையானது மிகுந்த ஆபத்தானது எனவும், நாட்டில் பாரதூரமான பிளவுகள் ஏற்பட வழியமைக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபக்ஸ ஆட்சிக் காலத்திற்கு முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்தவர்கள் மிகுந்த கௌரவமான பிரஜைகள் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் கொள்ளையர்கள் குண்டர்களே சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக அங்கம் வகித்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்த, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென விரும்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ புதிய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியைத் தழுவி வாக்களித்தவர்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென்ற புதிய கலாச்சாரமொன்றை உருவாக்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க 48 லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட போது அந்த 48 லட்சம் வாக்காளர்கள் பற்றி எவரும் பேசவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

No comments

Powered by Blogger.