கொழும்பில் ஆங்கிலத்திலும், யாழ்ப்பாணத்தில் ஹிந்தியிலும் மோடி உரையாற்றியது ஏன்..?
-கீரன்-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது ஆற்றிய உரைகளில் முக்கியமானவை இரண்டு. முதல்நாள் ஸ்ரீ ஜெயவர்தனபுரத்திலுள்ள பாராளுமன்றத்தில்; மறுநாள் யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில்.
பாராளுமன்றத்தில் ஆங்கிலத்திலும் யாழ் நூலகத்தில் ஹிந்தியிலும் தனது உரைகளை அவர் ஆற்றியமை தற்செயலானவை அல்ல. இருப்பினும், சிலர் இவை தற்செயலானவைதான் எனக் கருதவும் வாதிடவும் கூடும். பெரும்பான்மை சிங்கள மக்களை கருத்தில் கொண்டு தெற்கில் ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர், சிறுபான்மை தமிழ் மக்களுக்கு வடக்கில் உரையாற்றிய போது எதனை கருத்தில் கொண்டு ஹிந்தியைத் தேர்ந்தெடுத்திருப்பார்..?
தெற்குடன் அறிவுபூர்வமாக பேசவும் வடக்குடன் உணர்வு பூர்வமாக பேசவும் அவர் இரு வேறு மொழிகளைத் தேர்ந்துள்ளார் என்பதை தவிர அதீதமான கற்பனைகளை அரசியலில் விதைப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
உத்தியோக பூர்வ விஜயத்தின் பொழுது ஒரு பிரதமரின் மொழித் தெரிவு உட்பட, அவர் பேசும் விடயங்கள் போன்றவை (ஏன் அவர் உட்கொள்ளும் உணவு கூட) ஏற்கனவே திட்டமிடப்பட்டு செய்யப்படுபவை. ஆகவே, தற்செயலானது என்கின்ற வாதம், ராஜதந்திர விடயங்களில் எடுபடாது.
ReplyDeleteஇந்தியாவின் தமிழ் நாட்டில் ஹிந்தித் திணிப்பை மோடி அரசு மேற்கொள்வதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது, இலங்கையின் தமிழ் மக்கள் மத்தியில் ஹிந்தியில் உரையாற்றியதில் மறைமுகமான ஒரு செய்தி நிச்சயம் உள்ளது. அது, இவர்கள் சொல்வது போன்ற (தெற்குடன் அறிவு பூர்வமாக, வடக்குடன் உணர்வு பூர்வமாக.. ) தமிழ் சினிமா சென்டிமென்ட் ரக காரணம் அல்ல. சர்வதேச விவகாரங்களில் நுணுக்கமான அறிவுள்ள ஆய்வாளர்கள் அதனை யூகித்துக் கொள்வார்கள்.
மோடி விஷயத்தில் தெற்கில் அறிவுபூர்வமாகவும் வடக்கில் உணர்வு பூர்வமாகவதற்காக அவர் ஆங்கிலம் ஹிந்தி போன்ற மொழிகளைத் தேர்ந்தெடுத்துப் பேசவில்லை....
ReplyDeleteஅவர் எந்த மேடையில், எங்கே பேசினாலும் Teleprompter என்கிற கருவி அவர் முன்னால் இருக்கும். அதில் ஓடும் எழுத்துக்கள் யார் கண்ணுக்கும் சாதாரணமாக தெரியாது, அது transparentஆக இருப்பதால் வீடியோவிலும் தென்படாது.
அந்த teleprompter ஐ பார்த்து, அதில் ஓடக்கூடியதை ஆங்கிலத்தைத்தான் வாசிக்கிறார். அமெரிக்காவில் சென்றும் அங்கு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் இதையே தான் கடைபிடித்தார். ஒரு நாட்டு பிரதமர் இவ்வாறு நடந்து கொள்வது கேலிக்குரியது தான்.
ஆனால் அவர் யாழ்பாணம் சென்றபோது அவருக்கு Teleprompter யைப் பார்த்து பேசக்குடிய ஏற்படுகள் செய்யப்படவில்லை என்பதன் வித்தியாசங்களை இலங்கை பாரளுமன்ற உரையிலும் யாழ்பாண உரையின் காணொளிகளைப் பார்த்து விளங்கிக்கொள்ளலாம். ஏன் கொழும்பில் ஒரு பெளத்த மடத்திலும்கூட ஹிந்தியிலே பேசி ஒரு புத்த பிக்குவினால் சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.. அப்போ அங்கு அவர் உணர்வுபூர்வமாகவா பேசியிருப்பார்?
கல்முனை ப்றீஷ் கூறுவது சரியாக இருக்கமுடியும்.
ReplyDeleteஒரு நாட்டின் தலைவர் சாதாரண அதிகாரிகள் போன்று நினைத்ததையெல்லாம் பேசிவிட கூடாது என்பது இராஜதந்திர அணுகுமுறைகள்.