Header Ads



நிறைவேற்று அதிகாரம், யாரிடத்தில் இருக்கவேண்டும்..?


-Abu Shakeek-

இலங்கை வரலாட்றில் மறைந்த J.R. ஜயவர்டன அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார முறைமை இன்றைய கால சூழ்நிலையில் காலத்துக்கு பொருந்தாத, அதே நேரம் யாப்புச்சர்வதிகாரியாக மாறும் அபாயம் உண்டு..

சிறுபான்மைச் சமூகத்தவர்களை பதுகாக்க அதிகாரம் வேறாக்கப்பட்டு, அரசாங்கத்தின் மூன்று (நிர்வாகத் துறை, சட்டத்துறை, நீதித்துறை) ஆகிய துறைகளில் கையளிக்கப்பட வேண்டும் என்று அரசியல் அறிஞர் மொண்டஸ்கியூ முன்வைக்கிறார். அதேசமயம் பொது அபிப்பிராயத்தை அறியும் பொருட்டு சுதந்திரமான நீதித்துறையும் அமைக்கப்படல் வேண்டும். மாறாக தனியொருவரிடம் அதிகாரம் திரண்டால், சுய நல மற்றும் குடும்ப அபிவிருத்தியை மேலோங்கச் செய்யவே நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த முனைவார்.    

கடந்த ஆட்சியாளர் மஹிந்த அவர்களின் சதா காலத்தில், மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தை அவர் துஷ்பிரயோகம் செய்ததை தொடர்ந்து, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற பாரிய மன உளைச்சல் சகல மக்களிடத்திலும் வெளிப்பட்டன.

நல்லாட்சிக்கான ஜனாதிபதி மைதிரியின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தக்கூடிய அவரது செயற்பாடுகளை கூர்ந்து அவதானித்தால், அதிகாரத்தை மைதிரி அவர்களுக்கு  கையளிப்பது  மிகவும் பொருத்தமாக அமையும் என பொதுமக்கள் மற்றும் நடுநிலை அரசியல் வாதிகள் சிலாகித்து வருவதை கானமுடிகின்றது.

உண்மையான மதப்பற்றுள்ள எந்த சமூகத்தவர்கலாகா இருந்தாலும் சரியெ,அவர்களிடத்தில் இன மத வேறுபாடிண்றி, நல்ல பன்பும் மனித  நேயமும் இறை நம்பிக்கையும்,  இறையச்சமும் இருந்தாக வேண்டும் .இவை இல்லாத போது  ஒருவரிடத்தில் நிறைவெற்று அதிகாரம் தவழுமாக இருந்தால், அதுமுழு நாட்டுக்குமே சூனியமாக அமையும் என்பதில் கடுகளவும் சந்தேகமே இல்லை.

ஜனாதிபதி மைதிரியின் செயற்பாடுகள் இன்று வரை மூவின சமூகத்தவர்களது மத்தியில் நன் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இது இன மத மற்றும் அரசியலுக்கு அப்பால் மனச்சாட்சியுடன் பேசப்படவேண்டும். இலங்கையில் இன்று கானப்படுகின்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை வேர எந்த ஜயனாயக நாடுகளிளும் நடைமுறையில் இல்லை.

America,Europe நாடுகளில்  கூட இப்படியான நிறைவேற்று அதிகார முறை உண்டா...?! ஆனால்,இந்த நாடுகளின் ஆதரவுகளையும்,கொள்கைகளையும் இராஜதந்திர உறவுகளையும் மேற்கொண்டு வருவதை நிதானமாக சிந்திக்கும் அனைவருக்கும் புலனாகும்.

No comments

Powered by Blogger.