அல்லாஹ்வையும், முஹம்மது நபியையும் தூஷித்து குருநாகல் வீதிகளில் வாசகங்கள்
குருநாகல் தம்புள்ளை வீதியோர மாகவுள்ள மதில் சுவர்களில் அல்லாஹ்வையும் நபிகள் (ஸல்) அவர்களையும் தூஷித்து அசிங்கமான முறையில் வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. அத்தோடு குறித்த பிரதேசத்தில் முஸ்லிம்களை கேவலப்படுத்தும் வகையிலான வசனங்களும் எழுதப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்திலுள்ள ஸாஹிரா வீதி பெயர்ப்பலகை கடந்த வருடம் கறுப்பு மை பூசி அழிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் பெயர்ப்பலகைக்கு மை பூசப்பட்ட விடயம் தொடர்பில் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் தொடர்ந்தும் குறித்த பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் இடம்பெறுவதையிட்டு முஸ்லிம்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது விடயத்தில் குருநாகல் மாநகர சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றனர். விடிவெள்ளி
முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து கவனம் செலுத்த வேண்டும், நடவடிக்கை தேவை.
ReplyDeleteஆனால், அல்லாஹ்வையும், முஹம்மது (ஸல்) அவர்களையும் தூஷித்து எழுதியதை பொருட் படுத்தவே தேவையில்லை, இவர்கள் தூஷித்து எழுதியதால் பலவீனப்பட்டுப் போகும் நிலையில் அல்லாஹ் இல்லை.
தூஷித்து எழுதியதைக் கண்டு யாராவது கோவம் கொண்டால், அவர்தான் அல்லாஹ்வை அவமதிக்கின்றார் என்று அர்த்தம், அதாவது தூஷித்து எழுதியதால் அல்லாஹ்வுக்கு பாதிப்பு என்று சொல்லாமல் சொல்கின்றார்.
Hallo litttle star.do you like if i scold your mother? Rasool is 100× respectable for all of the Muslims. Please mind it brother
ReplyDeleteஎன்ன அறிவு? அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் இருக்கும் சக்திதானா எனது தாய்க்கும் இருக்கும்? அல்லா, இந்த உலகங்களையே படைத்து பரிபாலிப்பவன், அவனது தூதரோ உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான, வழிகாட்டக் கூடிய தீனைக் கொண்டு வந்தவர். எனது தாயோ என்னையும் எனது சகோதரங்களையும் பெற்றேடுத்ததுடன், தன பாட்டில் வீட்டில் இருக்கும் ஒரு பெண்மணி.
ReplyDeleteஎனது தாயை யாராவது தூற்றினால் நான் கேள்வி கேட்பேன், ஏனெனில் எனது தாய் போதுவானவள் இல்லை. ஆனால், அல்லாஹ்வும் ரசூலும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர்கள், ஆகவே அனைத்து மக்களுக்கும் அவர்களில் உரிமை உள்ளது.
நாட்டின் ஜனாதிபதியிடம் மக்கள் கணக்குக் கேட்கின்றனர், இல்லாவிட்டால் ஊழல் என்கின்றனர், ஏனெனில் அவர் அனைவருக்கும் பொதுவானவர், ஆனால் உங்கள்/ எனது தந்தையின் கடைக் கணக்கை பொதுமக்கள் கேட்பதில்லை, ஏனெனில் நமது தந்தையர் பொதுவானவர்கள் அல்ல.
இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளவிட்டால், நீங்கள் கெட்டது போன்ற கேள்விகள் வருவது தவிர்க்க முடியாதது.
மொட்டைக் கடிதங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் அவற்றை எழுதியமைக்கான காரணங்கள் குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
ReplyDeleteநாங்கள் இதை விதையில் கிள்ளியெறிய வேண்டும். அன்றேல் மற்றவர்களுக்கு தலைக்கணம் ஏறிவிடும்..
ReplyDeleteஅவர்கள் எங்களை கோலைகளாக கருத வைப்பு இருக்கிறது..