தேர்தல் வேட்பு மனுக்களை, பணத்துக்கு விற்கும் ஐ.தே.க.
-ஜஹங்கீர்-
ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலங்களில் தமது கட்சியில் போட்டியிட்டு வருகின்ற பிரபல்யங்களுக்கு பணத்துக்கு வேட்பு மனுக்களைவிற்று வந்திருக்கின்றது.
கட்சிக்கான நிதி என்ற பேரில் இவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டிருக்கின்றது என்றாலும் மிகச் சிறிய ஒரு தொகை பணத்தைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு இந்தப் பணத்தை ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் தமது பக்கட்டுக்களில் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மோசடி நாடு பூராவிலும் நடந்திருக்கின்றது. குறிப்பாக கண்டியிலுள்ள பிரபல ஐ.தே.க. அரசியல்வாதிகள் இருவர் இந்த வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர். இதில் ஒருவர் தற்போது நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் தொடர்பில் சட்டத்தின் பிடியில் சிக்கி இருக்கின்றார் மற்றவர் தற்போது ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது 15 இலட்சம் முதல் 25 இலட்சம்வரையில் தல ஒருவரிடம் இவர்கள் பணம் அறவிட்டிருக்கின்றார்கள். இலட்சக் கணக்கான ரூபாய்களைக் கொடுத்து சீட்டு வாங்கிய பல முஸ்லிம்கள் தேர்தலில் தோற்றுப்போய் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த முறை ஐ.N;த.க. பொதுத் தேர்தலுக்கு கோடிக் கணக்கான ரூபாய்களுக்கு வேட்பு மனுக்களை விற்பனை செய்யும் என்பது உறுதி. பணம் இருப்பவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.
Post a Comment