Header Ads



மத்திய ஆபிரிக்க குடியரசில் அனைத்து பள்ளிவாசல்களும் அழிவு

மத்திய ஆபிரிக்க குடியரசில் தொடரும் வன்முறையால் அங்கிருக்கும் 436 பள்ளிவாசல்களில் பெரும்பாலும் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் சமன்தா பொவர் குறிப்பிட்டு ள்ளார்.

ஓர் ஆண்டுக்கு முன்னர் மோதல் ஆரம்பமானது தொடக்கம் இதுவரை 417 பள்ளிவாசல்கள் தரைமட்டமாக்க ப்பட்டு விட்டதாக பொவர் செவ்வாயன்று குறிப்பிட்டார். மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய ஆபிரிக்க குடியரசுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை பிரதிநிதிகள் கடந்த வாரம் விஜயம் மேற்கொண்டனர்.

அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பொவர் இதனை குறிப்பிட் டார். ஐ.நா. பிரதி நிதிகளின் விஜயத் தின்போது மத்திய ஆபிரிக்க குடியரசு தலைநகர் பங்குயி வில் எஞ்சியிருக்கும் ஒரே பள்ளிவாசலு க்கு சென்றுள்ளனர்.

அங்கிருக்கும் மக்கள் பீதியில் உறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்;. கடந்த 2013ம் ஆண்டு முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்கொண்ட கிளர்ச்சி குழு அரசை கவிழ்த்ததை அடுத்து கிறிஸ் தவ ஆயுதக் குழுக்கள் முஸ்லிம்களு க்கு எதிராக தாக்குதல்களை ஆரம் பித்தன. இந்த வன்முறையில் ஆயிர க்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமா னவர்கள் இடம்பெயர்ந்தனர்.

சர்வதேச அமைதிகாக்கும் படையினரின் உதவியோடு அமைக்கப்பட்டி ருக்கும் மத்திய ஆபிரிக்க குடியரசின் இடைக்கால அரசு நாட்டில் நிலவும் பதற்றத்தை தணித்து அமைதியான தேர்தல் ஒன்றை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

No comments

Powered by Blogger.