Header Ads



மைத்திரி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில், நடைபெற்ற கூட்டத்தில் காரசாரமான விவாதம்

தேர்தல் முறை மாற்றம் தொடர்பான அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க் கட்சித் தலைவர் நிமல் ஸ்ரீபால டி.சில்வா உட்பட அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர்.

இக்கூட்டத்தில் தேர்தல்கள் ஆணையாளர், சட்டமா அதிபர், நில அளவைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆகியோர் விசேடமாக கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கட்சிகளின் பிரதிநிதிகளிடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றது.

நீண்ட நேரம் எதிரும் புதிருமான கருத்துகள் விவாதிக்கப்பட்ட போதிலும் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாமல் அக்கூட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகள் மீண்டும் நாளை கூடி புதிய தேர்தல் முறை குறித்து ஆராய்வது என தீர்மானிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.