யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு - நரேந்திர மோடியிடம் மகஜர்
- இர்ஷாத் றஹ்மத்துல்லா -
இலங்கை முஸ்லிம்களுக்கும், இந்திய முஸ்லிம்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டி இலங்கையில் இந்தியா அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தப்படும் இந்திய வீடமைப்பு திட்டத்தில் முஸ்லிம்களுக்கு சரியான ஒதுக்கீடு வழங்கப்படாமை தொடர்பில் வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் ஒன்றியம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மகஜர் ஒன்றினை கையளித்ததாக ஒன்றியத்தின் தலைவர் அஷ்-ஷெய்க் முபாறக் (றசாதி) தெரிவித்தார்.
இன்று ஊடகங்களுக்கு அவர் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு கூறினார்.
கேள்வி-பல்வேறு கட்சிகள் இந்திய பிரதமரை சந்தித்து உரையாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.வடக்குக்கு மோடி வருகைத்தந்தார்.உங்களது ஒன்றியம் என்ன விடயங்களை உள்ளடக்கியதாக மகஜரை கையளித்தது.
பதில்-மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் துறை புகையிரத சேவை ஆரம்பிக்க இந்திய பிரதமர் வருகைத்தந்திருந்தார்.அப்போது அவரை அந்த இடத்தில் சந்தித்து எமது மக்களது தேவைகள் என்ன என்பது பற்றிய மகஜரை கையளிததேன்.
கேள்வி-அதனது உள்ளடக்கம் பற்றி கூறமுடியுமா ?
பதில்-ஆம்,இந்திய இலங்கைக்கு பல உதவிகளை செய்துள்ளது.செய்தும் வருகின்றது.குறிப்பாக இந்திய வீடமைப்பு திட்டமானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரியது.இந்த தெரிவில் சில அதிகாரிகள் உரிய அனுகுமுறையினை கையாலவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்டிள்ளோம். அதிலும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல் வவுனியாவில்,மன்னார் மாவட்டத்தில் பெறியமடு,விடத்தல்தீவு,உப்புக்குளம் தெற்கு,வடக்கு உள்ளிட்ட பல கிராமங்களில் கொட்டில்களில் வாழும் முஸ்லிம்கள் பட்டியல் படுத்தப்பட்ட போதும் அவர்களுக்கு அது அந்த வீடுகள் வழங்கப்படவில்லை.
இதனால் இன முறுகலை இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டம் ஏற்படுத்தியுள்ளது என்று பேசப்படுகின்ற விடயத்தையும் நாம் அந்த மகஜரில் தெரிவித்துள்ளோம்..இது தொடர்பில் இந்திய பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளோம்.
கேள்வி –உங்களது மகஜரில் இந்த முஸ்லிம்களுக்கு எத்தனை வீடுகள் தேவையாகவுள்ளது என்பது தொடர்பில் ஏதும் குறிப்பிட்டுள்ளீர்களா ?
பதில்-குறிப்பிட்டுள்ளோம்.இன்னும் 12500 வீடுகள் கிடைக்கின்ற போது இந்த வீட்டுப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கமுடியும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளதுடன்,அடுத்த கட்ட வீடுகள் வெகு விரைவில் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் அதில் நாம் சொல்லியுள்ளோம்.
கேள்வி-அதற்கு மோடி அவர்கள் தலைமன்னாரில் வைத்து பதில் ஏதும் சொன்னாரா?
பதில் – அவர் மகிவும் குறுகிய நேரம் தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.அங்கு அந்த பதிலை உடன் தராவிட்டாலும் இந்த கோறிக்கை தொடர்பில் வெகு விரைவில் பதிலை அவர் எமக்கு அறிவிப்பார் என நம்புகின்றேன்.இதே வேளை இந்த விடயம் தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரை ஏக காலத்தில் தொடர்பு கொள்ள எமது ஒன்றியம் தீர்மானித்துள்ளது. என்றும் அவர் கூறினார்.
இனவெறியனிடம் இந்த மகஜர் ஒன்றும் செல்லுபடியாகாது.சிங்களத்தில் சொல்வார்கள் ஹொரயின் அம்மாட்ட பேண பலண்ட கியாபாவெர்?
ReplyDelete