Header Ads



மஹிந்த ராஜபக்ஸவின் பெயரில் ஆலயம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்காக ஆலயம் ஒன்று தன் சொந்த பணத்தில் நிர்மானிக்கவுள்ளதாக கேகாலை தொழிலதிபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான இடம் ஒன்றை இந்நாட்களில் கண்டி, கொழும்பு வீதியில் தேடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கும் குறித்த தொழிலதிபர் நாட்டை காப்பாற்றிய தலைவரை எப்போதும் இலங்கை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகத்தையே ஆச்சரியப்படுத்தும் வகையில் தீவிரவாதத்தை தோற்கடித்து நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த வீர கதையை குறித்த ஆலயத்தில் கல்வெட்டாக பதிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் நாட்டிற்காக பல சேவைகளை செய்த அரசர்களுக்காக ஆலயங்கள் கட்டபட்டுள்ளதை சுட்டிக்காட்டியவர் தனது மூத்த மகன் இராணுவத்தில் சேவை செய்துகொண்டிருந்த சந்தர்பத்தில் எதிரிகளின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் மகிந்த யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததனால் இரணுவத்தில் கடமை புரிகின்ற தனது இரண்டாவது மகனின் உயிர் காப்பாற்றபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. யார் இந்த நபர், இவர் எப்படி தொழில் அதிபர் ஆனார், இவரது தொழில் என்ன, கடந்த காலத்தில் இவர் எப்படி பணம் சம்பாதித்தார் என்பதை தேடினால், பல இரகசியங்கள் வெளிவரவும் கூடும்.

    ReplyDelete

Powered by Blogger.