''வட்டி'' வலம்வரும் பல்வேறு வடிவங்கள் (விபரம் இணைப்பு)
(JM.Hafeez)
இது வட்டியை பிரதானமாக ஆயுதமாகக் கொண்டு சகல நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைக்கும் நவீன காலணித்துவத்தின் மற்றொறு வடிவமாகு சர்வதேச நாணய நிதியம் மாறியுள்ளது. அதே நேரம் நாணயங்களின் முகப் பெறுமானமும் அகப் பெறுமானம் வித்தியாசப்பட்ட காலம் முதல் உலகப் பொருளாதாரத்தில் தளம்பல் நிலைகள் ஏற்பட ஆரம்பித்ததாக மர்கஸ்ஸூஸ் சலாமா அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் அஷ்ஷேக் எம்.ஏ. அனஸ் முஹம்மத் (நளீமி) தெரிவித்தார்.
(13.3.2015) மடவளை ஜாமியுல் கைராத் ஜூம்மா பள்ளியில் இடம் பெற்ற விசேட பிரசங்கம் ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த 1924ம் ஆண்டின் பின்பே உலக பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்தன. இஸ்லாமிய கோட்பாடுகளுக்கமைய நடைமுறைப் படுத்தப்பட்டுவந்த உலக பொருளாதாரத்தில் அதற்கு மாற்றமான கொள்கைகள் புகுத்தப்பட்ட காலம் முதல் பொருளாதாரத்தில் வீழ்ச்சியும் தளம்பல் நிலைகளும் ஏற்படலாயின.
இரண்டாம் உமர் என்று அழைக்கப்பட்ட கலீபா உமர் இப்புனு அப்துல் அஸீஸ் அவர்களது காலத்தில் பொதுச் திறைசேரி நிரம்பி வழிந்த வரலாறு உண்டு. தேடித் தேடி மக்களுக்கு உதவி செய்தும் கூட பொதுத் திறைசேரி அல்லது பைத்துல் மால் காலியாக வில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர் பின்பற்றி இஸ்லாமிய பொருளாதாரக் கொள்ளையாகும். அன்று நாணயத்திற்கான முகப் பெறுமதி எதுவோ அதுதான் அதன் அகப் nபுறுமதியாகவும். இருந்தது. தங்க நாணயமாகவோ வெள்ளி நாணயமாகவோ பயன் படுத்தப்பட்டன. அது எங்கு எடுத்துச் சென்றாலும் அது தண்ணியில் விழுந்தாலும், மண்ணில் புதைந்தாலும் அதன் அகப் பெறுமதியோ முகப் பெறுமதியோ மாறாது. ஆனால் இன்றுள்ள ரூபாய்களோ அல்லது டொலரோ முகப் பெறுமதியை மட்டுமே கொண்டிருக்கும். அதற்கு அகப் பெறுமதி ஒன்று கிடையாது. அது வெறும் கடதாசித் துண்டு. தண்ணியில் விழுந்தாலும், தீயில் விழுந்தாலும், மண்ணில் புதைந்தாலும் அது அழிந்து விடும். பெறுமதி அற்றுப் போகும். வெறும் கடதாசித் துண்டாகும். இது என்று நடை முறைக்கு வந்ததோ அன்றுமுதல் உலகப் பொருளாதார தளம்பல்களும் ஆரம்பித்து விட்டன. சாதாரணமாக ஒருநாடு குறிப்பிட்ட அளவு பெற்றோலை வாங்க வேண்டுமா அதற்கு தங்கம் அல்லது வெள்ளி கொடுக்வேண்டும். புதிய நாணய உருவாக்கத்தின் படி வெறும் கடதாசியை டொலராக அச்சிட்டு வழங்கி அப்பொருடகளைப் பெற்றுக் கொள்வதால் இப்பாதிப்பு ஏற்படுகிறது. பண வீக்கம் ஏற்படுகிறது.
பின்னர் உலக மகாயுத்தங்கள் போன்ற ஏற்பட்டு அதன் பின் மிகத் தந்திரமான முறையில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டன. சுமார் 200 நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ என்ற ரத்ததிகாரத்தைக் கொண்ட ஒரிரண்டு நாடுகளாக அமெரிக்கா பிரித்தானியா போன்றவையும், ரஷ்யா போன்ற இடது சாரி நாடுகளுமே கொண்டிருந்தனவே தவிர 1924 வரை மிகப் பெரிய ஒரு சாம்ராஜ்யமாக இருந்த முஸ்லிம் நாடுகள் எதுவும் பரிந்துரைக்கப்பட வில்லை. அதே நேரம் சுமார் 200 நாடுகளைக் கொண்ட அமைப்பில் சுமார் 50 நாடுகள் இஸ்லாமிய நாடுகளாகவும் இருந்தன.
அதேநேரம் உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியம் உருவாக்கப்பட்டு அதன் கீழ் உலகிலுள்ள அனைத்து நாடுகளின் மத்திய வங்கிககளும் கொண்டு வரப்பட்டன. அதே நேரம் ஒவ்வொரு மத்திய வங்கியின் கீழும் அந்தந்த நாடுகளின் சகல வங்கிகளும் கொண்டு வரப்பட்டன. இவ்வாறு முழு உலகிலுள்ள நிதி நிறுவனங்கள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தினால் அல்லது ஐ.எம்.எப். இனால் கட்டுப் படுத்தும் நிலை உருவானது. இதனால் முழு உலகிலுமுள்ள நிதி நிர்வாகக் கொள்கைகளும் பொருளாதாரக் கொள்கைகளும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு இன்று வரை அதனால் உலகப் பொருளாதாரம் சுரண்டப்பட்டு வருகிறது.
இது வட்டியை பிரதானமாக ஆயுதமாகக் கொண்டு சகல நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைக்கும் நிலை ஏற்பட்டது. இது நவீன காலணித்துவத்தின் மற்றொறு வடிவமாகும்.
அடிமைத் தொழில் அல்லது அடிமை முறை உருவாகக் காரணமாக பண்டைய காலத்தில் இருந்த நேரடி வட்டமுறை எனலாம். மனிதன் கடன் எடுத்தான். அதனைக் கொடுக் முடியாத போது அவனுக்காக ஊழியம் செய்தான் இது காலப் போக்கில் அடிமைத் தொழிலானது. ஆனால் நவீன காலத்தில் உலக வங்கி வறுமையான நாடுகளுக்கு கடன் வழங்கி அதன் வட்டிப் பெருக்கம் காரணமாக கடனை மீள வழங்க முடியாது சில நாடுகள் ஐ.எம்.எப். ன் நிபந்தனைகளுக்கு செவி சாய்க்கும் நிலை ஏற்படுகிறது. அதாவது இலங்கை போன்ற நாடுகளுக்கு கடன் கொடுத்து எமது செயற்பாட்டை கட்டுப் படுத்த நிபந்தனைகளை விதிக்கின்றன. இது நவீன காலணித்துவத்தின் மற்றொரு வடிவமாகப் பாhக்கலாம்.
எனவே இஸ்லாமிய கோட்பாடுகளின் படி வட்டியானது ஒருவனின் பொருளாதாரத்தை அழித்து விடுகிறது. அதே நேரம் சட்டதிட்டங்களை அனுசரித்து மேற்கொள்ளப் படும் வியாபாரம் அபிவிருத்தி அடைகிறது.
இன்று வட்டி பல்வேறு வடிவங்களில் வலம் வருகிறது. கமிசன், தரகு, சேவைக்கட்டணம், பினாஸ், லீசிங், ஹயர் பேர்ச்சசிங், சீரோ இண்ட்ரஸ்ட், ஊக்குவிப்புத் தொகை, முற்கொடுப்பனவு... என்று எத்தனையோ புதுப் புதுப் பெயர்களில் வழங்கப் படுகிறது. குறிப்பிட்ட ஒரு நிதிக்கு உழைப்போ முதலீடோ இன்றி இலாபம் மட்டும் வழங்கப் படுமாயின் அது வட்டியாகும். அல்லது இலாபம் அல்லது நட்டம் இரண்டையும் ஏற்றுக் கொள்ளாது இலாபத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் கொடுக்கள் வாங்கள்கள் வட்டி என்ற அந்தஸ்தை அடையலாம். இஸ்லாமிய கண்ணோட்த்தில் வட்டி கொடிய பாவமாகும் என்றார்.சில இடங்களில் 1 சதவீத வட்டி என்றும் சில இடங்களில் முதல் ஏழு நாட்களுக்கு 0.9 சதவீத வட்டி என்றும் கவர்ச்சியாக விளம்பரம் செய்கிறார்கள். 0.9 வீதம் என்றால் நூறு ரூபாய்கு 90 சதம். எவ்வளவு சிறிய தொகை. ஒரு ரூபா கூட இல்லையே. ஆனால் நடப்பது என்ன. 1000 ரூபா கடன் எடுத்தால் ஒருநாளைக்கு 9 ரூபா வீதம் முதல் வாரம் வட்டி மட்டும் 63 ரூபா. இதன் பின் வட்டி வீதம் அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கா விட்டாலும் முதல் மாதமாகும் போது வட்டி மட்டும் 252 ரூபாவாகிறது. அவன் ஒரு வருடம் கடனை மீளச் செலுத்தாவிட்டால் 1000 ரூபாவிற்கான வட்டி மட்டும் 3276 ரூபாவாகிறது. அவன் மொத்தம் 4276 ரூபாவிற்கும் மேல் செலுத்த வேண்டி வரும். இதுதான் வட்டியின் குட்டி விளையாட்டாகும் என்றார்.
சவூதி அரேபியா உட்பட அனைத்து நாட்டினதும் பொருளாதாரம், தனிப்பட்ட வியாபாரங்கள், கொடுக்கல் வாங்கல்கள், அரச துறைகள் என்று வட்டி எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கிறது.
ReplyDeleteஇஸ்லாமிய வங்கிகள், இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் என்று சொல்லிக்கொண்டாலும் வட்டி அங்கே வெவ்வேறு பெயர்களில் நிச்சயமாக உள்ளது.
வட்டியை குறை சொல்பவர்கள் இருக்கின்றார்கள், ஆனால் வட்டியில் இருந்து முற்றாக தவிர்ந்து வாழும் யாரையும் காண்பது அரிது.
மாற்றுத் திட்டங்கள் என்று சொல்லி சிலர் அறிமுகம் செய்யும் திட்டங்கள் தோல்வியையே தழுவுகின்றன.
வட்டி வேண்டாம் என்றால், அதனை விட முற்றிலும் சிறந்த மாற்றுத் திட்டம் தேவை, அதனை மெளலவிகளால் அறிமுகம் செய்ய முடியாது, அதற்கு பொருளாதார நிபுணர்கள் கூட்டிணைந்து பணியாற்ற வேண்டும்.
தற்பொழுதைய நிலையில் வட்டியில் இருந்து முற்றிலும் தவிர்ந்து வாழ்வது என்பது யதார்த்தத்தில் சாத்தியமில்லை.
வட்டியை