Header Ads



இலங்கையின் கனவு தகர்ந்தது - சங்கா, மஹேல விடைபெற்றனர்


தென் ஆபிரிக்கா-இலங்கை அணிகளுக்கிடையிலான இன்றைய காலிறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

134 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது.

தென் ஆபிரிக்க அணி சார்பில் களமிறங்கிய டி கொக் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, இலங்கை அணி 133 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை சார்பில் அதிகூடிய ஓட்டங்களை (45) சங்கக்கார பெற்றுக்கொடுத்தார்.

போட்டியில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய இம்ரான் டஹிர் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

4 comments:

  1. இன்று ஆடியது இலங்கையர்களா அல்லது அவர்களது ஜேர்ஸிக்களை அணிந்து வந்த பாகிஸ்தான் அணியா.. என்று யோசிக்குமளவுக்குப்படி பொறுப்பில்லாதபடி ஆட்டமிழந்து சென்றார்கள். வழமையாக பாகிஸ்தான் அணியினர்தான் இப்படி ஆடுவார்கள்.

    இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியைப் போராடி வீழ்த்தும் என்று எதிர்பார்த்த ஆட்டம் இது. 180 ஓட்டங்களைப் பெற்றிருந்தால் கூட போராடிப் பார்த்திருக்க முடியும். ஆனால் ஆரம்பத்திலிருந்தே தயங்கியபடியேதான் ஆடினார்கள். சங்கக்கார அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ஒருமுனையில் நின்றிருக்க மறுமுனையில் விக்கட்டுகள் வீழ்ந்தவாறிருந்தன. திருமானவும் ஏமாற்றிய நிலையில் பின்பு வந்தவர்களும் ஏமாற்றிவிட சங்கக்காரவால் தனித்து எதுவுமே செய்ய முடியாத நிலை. 'பவர் ப்ளே' எடுத்து அடித்தாட ஆரம்பித்து ஆட்டமிழந்தார்.

    எவ்வாறாயினும் சங்கக்கார- மஹேல ஜோடிக்கு நமது பிரியாவிடை வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. When I think of cricket in SL its nothing but Sangakkara!

    ReplyDelete
  3. பொருத்தமான வீரர்களை இன, மத வேறு பாடின்றி தெரிவு செய்தால் மட்டும் இலங்கை அணி மீண்டும் தலை சிறந்த அணியாக பழைய நிலைக்குத் திரும்பும்.

    ReplyDelete

Powered by Blogger.