Header Ads



எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, நீதிமன்றத்தை நாடியுள்ள பேரியல் அஷ்ரப்

நாடாளுமன்ற உறுப்பினராக 10 வருடங்கள் பணியாற்றிய தனக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

விதவைகளுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் தனக்கு கிடைப்பதால், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தமைக்காக வழங்கப்படும் ஓய்வூதியத்தை வழங்காமல் இருப்பது அநீதியானது என பேரியல் அஷ்ரப் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க திஸாநாயக்க, பிரதிச் செயலாளர் ஆர்.ஏ. ரோஹனதீர மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தனது கணவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஷ்ரப் மரணமடைந்த பின்னர், அவருக்கான ஓய்வூதியம் தனக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் 10 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தனக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் கிடைக்கவில்லை என தெரிவித்து நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் அனுப்பியதாகவும் பேரியல் அஷ்ரப் கூறியுள்ளார்.

எனினும் இரண்டு ஓய்வூதியங்களில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுமாறு தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் மனுவில் கூறியுள்ளார்.

தான் வேறு திருமணம் செய்யவில்லை என்பதால், தனக்கு இரண்டு ஓய்வூதியங்களும் கிடைக்க வேண்டும் என்றும் பேரியல் அஷ்ரப் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.