அக்குறணையில் அரசியலமைப்பு சீர்திருத்தம், தேர்தல்முறை மாற்றம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு
உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் புதிய தேர்தல் முறை மாற்றம் குறித்து கண்டி மாவட்ட மக்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு ஒன்றை நீதிக்கும் அபிவிருத்திகுமான மக்கள் அமைப்பு அக்குறணையில் ஏற்பாடு செய்துள்ளது.
மேற்படி நிகழ்வில், முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொலைத் தொடர்பாடல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமுமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல்பீடத்தின் ஓய்வுபெற்ற முதுநிலை விரிவுரையாளர் என்.பீ.எம். சைபுதீன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
மார்ச் 21ம் திகதி, எதிர்வரும் சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு அக்குறணை அரபா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், உத்தேச அரசியல் சீர்திருத்தமும், தேர்தல் முறை மாற்றமும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் உரையாற்றவுள்ளார். புதிய அரசியல் மாற்றங்களும் முஸ்லிம்களது எதிர்காலமும் என்ற தலைப்பில், அல்ஹாஜ் என்.எம். அமீன் சொற்பொழிவாற்றவுள்ளதுடன், தேர்தல் முறை ஒரு நோக்கு என்ற தொனிப்பொருளில் ஓய்வுபெற்ற முதுநிலை விரிவுரையாளர் சைபுதீன் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அக்குறணை மற்றும் கண்டி மாவட்டத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள மேற்படி நிகழ்வில் இவ்விடயத்தில் ஆர்வமுள்ள சகலரையும் கலந்து பயனடையுமாறு நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.
மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்கள் 0777-842849 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக நீதிக்கும் அபிவிருத்திகுமான மக்கள் அமைப்பின் செயலாளர் இர்பான் காதரைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
Post a Comment