Header Ads



அமெ­ரிக்­காவின் பலத்தை அதி­க­ரித்து, சீனாவை ஓரம்கட்டவே நரேந்திர மோடி இலங்கை வந்தார் - பேரா­சி­ரியர் திஸ்ஸவிதா­ரண

இந்­தி­யாவின் தேவைக்கு இலங்­கையில் அதி­கா­ரத்தை பர­வ­லாக்­கவும் முடி­யாது. அந்­நாட்­டுக்கு எமது நாட்டின் இறை­யாண்­மையை தாரை வார்க்­கவும் முடி­யாது என கடு­மை­யாக இந்­தி­யாவை சாடும் முன்னாள் அமைச்­சரும் சம­ச­மாஜ கட்சித் தலை­வ­ரு­மான பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண திரு­கோ­ண­ம­லையை இந்­தி­யா­வுக்கு வழங்­கி­யமை எதிர்­கா­லத்தில் பயங்­க­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்த வழி­வ­குக்­கு­மென்றும் அவர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண எம்.பி. மேலும் தெரி­விக்­கையில்,

13 ஆவது திருத்தம் இந்­தி­யாவின் தேவைக்­காக எம் மீது பலாத்­கா­ர­மாக திணிக்­கப்­பட்­டது. அந்த நாட்டைப் போன்று இங்கு அதி­கா­ரத்தை பர­வ­லாக்க முடி­யாது.எமது நாட்­டுக்­கென ஒரு அர­சியல் வரை­யறை உள்­ளது. அதற்­க­மை­யவே அதி­கார பர­வ­லாக்கல் இடம்­பெற வேண்டும்.

எனவே பிர­தமர் மோடி எமக்கு யோச­னை­களை முன்­வைக்­கலாம். ஆனால் 13 ஐ தான் அமுல்­ப­டுத்த வேண்­டு­மென அழுத்தம் கொடுக்கும் அதி­காரம் அவ­ருக்கு கிடை­யாது. நாம் இந்­தி­யா­வுக்கு அடி­மைப்­பட வேண்­டிய அவ­சியம் இல்லை. உலகில் இன்று பொரு­ளா­தா­ரத்தில் சீனா இரண்டாம் இடத்தை பிடித்­துள்­ளது.

எனவே கடந்த ஆட்­சியில் சீனா­விடம் உதவி பெற்று பல அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதில் தவ­றேதும் இல்லை. இதனை பொறுத்­துக்­கொள்ள முடி­யா­ததன் கார­ண­மா­கவே இந்­தியா அமெ­ரிக்­கா­வுடன் இணைந்து கடந்த ஆட்­சியை கவிழ்த்து ஐ.தே. கட்சி ஆட்­சிக்கு வித்­திட்­டது.

தெற்­கா­சி­யாவில் அமெ­ரிக்­காவின் பலத்தை அதி­க­ரிக்க செய்து சீனாவை ஓரம் கட்டும் முயற்­சியை மோடி மேற்­கொண்டு வரு­கிறார்.அதற்­கா­கவே இங்கு விஜயம் செய்தார். ஒரு நாட்டின் எரி­பொருள் தொடர்­பான ஆதிக்கம் அந்­நாட்டு அர­சி­டமே இருக்க வேண்டும்.ஆனால் இன்று திரு­கோ­ண­மலை இந்­தி­யா­விடம் தாரை வார்க்­கப்­பட்டு எரி­பொருள் ஆதிக்­கமும் அந்­நாட்­டுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இது எதிர்­கா­லத்தில் எமது நாட்டில் பாரிய பயங்­க­ர­மான சூழ்­நி­லை­களை ஏற்­ப­டுத்தும். இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும்.இந்தியாவுக்கு நாம் அடிமைப்படும் நிலைமை தோன்றும் என்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண எம்.பி. தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.