மக்கள் எனக்கு தொடர்ந்தும், பேராதரவு காட்டி வருகின்றனர் - மஹிந்த ராஜபக்ஸ
தாம் ஒர் நல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் எனவும் சிலர் தம்மை கட்சியிலிருந்து விலக்க முயற்சித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் மேல் மாகாண உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஒருவரை நியமிக்க முடியாது 56 உறுப்பினர்களாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தாமே பலப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
தமக்கு வாக்களித்த 58 லட்ச மக்களுக்காக தொடர்ச்சியாகவும் குரல் கொடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் உறுப்பினர்களுக்கு ஏற்படக் கூடிய நெருக்கடிகள் மற்றும் கட்சி இரண்டாக பிளவடைவதனை கருத்திற் கொண்டே கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை பாதுகாக்க வேண்டியது ஜனாதிபதியும் கட்சித் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்வதாக சிலர் குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தமக்கு தொடர்ந்தும் பேராதரவு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்காது செயற்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகவும் நாணயமற்ற, நம்பகத்தன்மையற்ற, முஸ்லிம்களுக்கு ஞானசரார் (BBS) வடிவில் வேஷம் போட்டு இந்த நாட்டில் அவர்களை இல்லாது ஒழிப்பதற்கு முயன்ற மிகவும் ஒரு நயவஞ்சக அரசியல் தலைவராகவே உம்மை நாம் பார்க்கிறோம். இப்படியான ஒருவரிடம் இருந்து முஸ்லிம்களை பாதுகாக்குமாறு இறைவனிடம் பிரார்த்திகிறோம்.
ReplyDelete