அல்குர்ஆன் போட்டியில் பரிசுபெற்ற 'ஸ்வர்ண லஹரி'
(India) ஆந்திர பிரதேசம் விஜய வாடாவில் ஒரு இஸ்லாமிய தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் கே.ஸ்வர்ண லஹரி. அந்த பள்ளியில் குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்றது. அதில் தானும் கலந்து கொள்வதாக ஆசிரியைகளிடம் சொன்னாள் ஸ்வர்ண லஹரி. மகிழ்ந்த ஆசிரியைகள் இந்த மாணவிக்கு குர்ஆனை ஓத பயிற்சி கொடுத்தனர். ஆச்சரியமாக 200 மாணவிகள் கலந்து கொண்ட அந்த போட்டியில் பலரையும் பின்னுக்கு தள்ளி விட்டு பரிசை தட்டிச் சென்றார் ஸ்வர்ண லஹரி. இவர் குர்ஆனை ஓதும் அழகைப் பார்த்து முஸ்லிம்களே ஆச்சரியப்பட்டனர்.
பரிசு வென்ற ஸ்வர்ண லஹரி கூறுகிறார் 'நான் கோவிலுக்கும் செல்கிறேன். குர்ஆனை தொடர்ந்து ஓதி வருகிறேன். இன்னும் சில ஆண்டுகளில் அதன் பொருள் உணர்ந்து படிக்க தொடங்கி விடுவேன். என்னை இந்த அளவு ஊக்கப்படுத்திய எனது தந்தைக்கும் எனது ஆசிரியைகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்கிறார்.
ஸ்வர்ண லஹரியின் தந்தை துர்கா பிரசாத் கூறுகிறார்:
'பலரும் எனது மகளை பாராட்டி மகிழும் போதுதான் எனது மகள் எவ்வளவு அழகிய பணியை செய்துள்ளாள் என்பது விளங்குகிறது. அவளது திறமையைக் கண்டு மொத்த ஆடிட்டோரியமும் நானும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனோம். இதற்கு முன்னால் நான் குர்ஆனைப் பார்த்ததில்லை. எனது மகள் எனக்கு குர்ஆனை அறிமுகப்படுத்தினாள். அவளது ஆர்வத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. மாறாக உற்சாகப்படுத்தினேன். எனது நம்பிக்கையானது தனிப்பட்ட ஒன்று. உலக முடிவு நாளில் அனைத்து மதங்களும் ஒரே கோட்டில் சந்திக்கும்' என்கிறார்.
மகளும் தந்தையும் அனைத்து செல்வங்களும் பெற்று சிரமமின்றி நேர் வழியில் தங்களின் வாழ்வை அமைத்துக் கொள்ள நாமும் பிரார்த்திப்போம்.
மொழி பெயர்ப்பு:
சுவனப்பிரியன்
தகவல் உதவி:
-டெக்கான் க்ரோனிகல்
-தருண் குமார்.
மிகவும் நல்ல விடயம் இது.
ReplyDeleteஇந்தச் செய்தியை அறிந்ததும் மனமகிழ்வடையாத இஸ்லாமியர்களே இருக்கமாட்டோம்.
பிறிதொரு மதத்தை பின்பற்றும் ஒரு மாணவி நமது மத நூலினைக் கையிலெடுத்து அழகுற ஓதியதை அறிந்து நாம் மகிழ்கின்றோம்.
அந்த மாணவியின் பெற்றோரும் அவர்களது சமூகத்தைச் சார்ந்தவர்களும் அதனை எதுவித தயக்கமுமின்றி பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.
நல்லது; அவ்வாறாயின் இந்த இடத்தில் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன்
இதேபோல நமது மதத்தைச் சேர்ந்த ஒரு மாணவி பிற மதத்தைச் சேர்ந்த கீதை அல்லது பைபிள் போன்ற ஒரு மத நூலை இதே போல பள்ளிப்போட்டிக்காக மனனம் புரிந்து சபையிலோ அல்லது ஒரு பகிரங்க மேடையிலோ ஒப்புவித்திருந்தால் நாம் அதையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வோமா..?
Jesslya Jessly,
ReplyDeleteமிக நியாயமான கேள்வி. கடைசி வரை பதில் தர மாட்டார்கள். ஏனெனில், மதவெறி (துவேசம்) என்று ஒன்று இருக்கின்றது, ஆனால் குற்றம் சொல்வதோ அன்னியவர்களை, அவன் துவேசம் என்று
If you want memorize those and participate and happy yourself... You had better not encourage or invite others while given an authentic and pure source, The Quran.
ReplyDeletePlease upload that vedio
ReplyDeleteWe don't appreciate if our child engaged in such a competition.But we do appreciate the effort of the above child.It does not mean religious discrimination.Rather it is a quality of a real Muslim.
ReplyDeleteA real Muslim should abstain from criticizing like above (unwanted and atheist comments).
ஒரு உண்மை முஸ்லிம் இது போன்ற தேவையில்லாத, ஈமானுக்கு உலை வைக்கும் விமர்சனங்களிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்
Jesslya கூறுவது போன்று நாங்கள் செயற்படத்யார் அவ்வதங்களின் உண்மை வடிவங்கள் எங்கு உள்ளன எந்த தொழியில் உள்ளன வேறு வேதங்களை ஓதுவதும் மனனம் செய்வதும் இலகுவான காரியம் அல்ல காரணம் இவைகளின் மூலங்கள் வாழும் மொழியில் இல்லை மற்றும் அவைகளைக் கற்பது அவர்களின் மதத்தலைவர்களினாலேயே மறுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது காரணம் அவற்றை முறையாக சாதாரண் மணிதர்கள் வாசித்து விளங்க முற்பட்டால் மதத் தலைவர்களுக்கு கேள்விகள் அதிகரிக்கும் அவர்கள் மதத்தலைவர்கள் கூறுவதும் வேதங்கள் கூறுவதற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படும்
ReplyDeleteMy front of view: we can come from “HARRAM” to “HALAL” But we never go to “HARRAM” from “HALAL” - i hope you guys understand my point. - Thank you.
ReplyDeleteMy front of view: we can come from “HARRAM” to “HALAL” But we never go to “HARRAM” from “HALAL” - i hope you guys understand my point. - Thank you.
ReplyDelete