Header Ads



தமிழர் - முஸ்லிம் இனவிரிசலை ஏற்படுத்திய பெருமை தமிழ் கூட்டமைப்பையே சாரும் - ஆனந்தசங்கரி


-எம்.வை.அமீர் -

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இன விரிசலைஏற்படுத்திய பெருமை இன்றைய தமிழ் கூட்டமைப்பையே சாரும் என இலங்கை தமிழரசுகட்சியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்தார். கடந்தகாலங்களில் மட்டுமன்றி அண்மையில் கிழக்குமாகாணசபையில் முதலமைச்சர் நியமனம் வரை முஸ்லிம் சமுகம் தொடர்பான தமது உண்மையான முகத்தை இரா சம்பந்தனும், சுமந்திரனும் வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளனர். என 2015-03-15 ல் சம்மாந்துறையில் இடம் பொற்ற. இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கும் தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எல்.றியாஸ் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பொன்று சமாதான கற்கைகளுக்கான நிலைய காரியாலயத்தில் இடம்பெற்றது. அதன் போதே இந்தகருத்தினை ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த ஆனந்தசங்கரி,

கடந்தகாலங்களில் முஸ்லிம் தலைவர்கள் இலங்கைதமிழரசுக்கட்சியின் மூலமே தமது அரசியல் பிரசன்னத்தை நிகழ்த்தியிருந்தனர். தமிழ் மக்களினவிடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியதன் விளைவுதான் இன்று இந்த நாட்டிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான பிளவுகளை ஏற்படுத்தியது. ஒரு போதும் தழிரசுக்கட்சி ஆயுதப் போராட்டத்தினை ஆதரித்ததில்லை என்பதோடு முஸ்லிம் மக்களின் உண்மையான அபிலாசைகளுக்கு குறுக்காக இருந்ததும் இல்லை என்றும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவி தங்களுக்கு கிடைக்காது என்று தெளிவாக தெரிந்திருந்த போதிலும் வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராக அறிக்கைகளைவிட்டு முஸ்லிம் மக்களின் உணர்வுகளை காயப்படுத்திவிட்டு இன்று ஒரு முஸ்லிமை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு அவரின் மூலம் பெறப்பட்ட இரண்டு அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொண்டு காலங் கடத்துகின்றனர். 

விடுதலைப் புலிகளை தமது ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டுஅரசியல் நடத்தும் இவர்களே வடமாகாணத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அத்தனை இன்னல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்..

தமிழ் முஸ்லிம் சமுகங்கள் ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற சுய நல போக்குடைய கட்சிகளின் பேச்சினை நம்பி தங்களுக்குள் பிரிந்து விடாமல் மீண்டும் தங்களுக்கிடையே இருந்த கசப்புணர்வுகளை மறந்து மக்களுக்கிடையே ஒரு நல்லிணக்கத்தினை ஏற்படுத்த ஒன்றுபட்டுளைக்க வேண்டும் எனவலியுறுத்தித் தெரிவித்தார். இந்நிகழ்வில் கல்முனை வர்த்தகசங்க தலைவர் சாபி ஹாத்திம் உட்பட பல்கலைக்கழகவிரிவுரையாளர்கள் மற்றும் முக்கியபிரமுகர்கள் பலரும் கலந்தகொண்டனர்.

1 comment:

  1. அட்ரஸ் தெரியாத ஒரு ரியாஸ், அட்ரஸ் இல்லாமல் போன ஆனந்த சங்கரி.... அழுகல் தேங்காயும், உடைந்த சட்டியும் கூடம் போட்ட கதை.

    சுமந்திரன் மற்றும் இரா சம்மந்தன் ஆகியோர் தமிழ் முஸ்லிம் உறவுக்காக மேற்கொண்டுவடும் செயற்பாடுகளை அனைவரும் அறிவார்கள். சுமந்திரன், மற்றும் இரா சம்மந்தனின் பரந்த நோக்கம் கொண்ட செயற்பாடுகளால், குறுகிய எண்ணம் கொண்ட புலிப் பினாமிகள் இவர்களின் கொடும்பாவியைக் கூட எரித்து இருந்ததை அனைவரும் அறிவோம்.

    அரசியல் அட்ரஸ் இல்லாதவர்கள் போடும் கூச்சலை யாரும் பொருட் படுத்தப் போவதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.