Header Ads



நரேந்திர மோடிக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சந்திப்பு


இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று மாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. 

இச்சந்திப்பின்போது இருவரும் மனம்விட்டு பேசியதாக அறியமுடிகிறது. பாரதப் பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது ஏற்பாடு செய்யப்பட்ட 40இற்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ சந்திப்புகளின் இறுதிச் சந்திப்பாக இது அமைந்தது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஷெய்யத் அக்பதுர்டீன் தெரிவித்துள்ளார். 

3 comments:

  1. இலங்கை ஜனாதிபதி இந்தியா சென்ற பொழுது மன்மோகன் சிங்கை சந்தித்தாரா? இல்லையே! பின்னர் எதற்கு மோடி மகிந்தவை சந்திக்க வேண்டும்? அப்படிப் பார்த்தால் தற்பொழுது மகிந்தவை விட சந்திரிகா குமாரதுங்க செல்வாக்குடன் காணப்படுகின்றார், அவரையல்லவா மோடி சந்தித்து இருக்க வேண்டும்?

    ReplyDelete
  2. 'பாருங்க மிஸ்டர் மோடி! எப்படி இருந்த நான் எப்பிடி ஆணயிட்டேன், '

    "ஹா..ஹா..! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. எல்லாவற்றையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்க மிஸ்டர் மகிந்த, என்னைப்போல..!"

    'ஆமாமா.. சரியாச் சொன்னீங்க மிஸ்டர் மோடி, உங்களைப்போல ஆகிறதுக்குத்தான் இப்ப நான் ட்ரை பண்ணிட்டிருக்கிறேன். ஆனா இவங்க எலெக்ஷனை நடத்துவாங்களா இல்லையான்னே தெரிய மாட்டேங்குதே..!'

    ReplyDelete
  3. Pakathule irunthu parthingalo...

    ReplyDelete

Powered by Blogger.