Header Ads



மகிந்த கதிர்காமம் செல்கிறார், கதிர்காம ஆலயத்தை அரசியல் அழுத்தமற்றதாக்க மைத்திரி உத்தரவு

மகிந்த ராஜபக்ச தன் நலன் வேண்டி நாடு பூராகவும் இடம்பெறுகின்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளார். மற்றுமொரு பூஜைக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த நாளை கதிர்காமத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கதிர்காம ஆலயத்தை அரசியல் அழுத்தங்களற்ற இடமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி உத்ததரவிட்டுள்ளார். புத்தசான அமைச்சர் கரு ஜயசூரியவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பஸ்நாயக்க நிலமே ஒருவரை நியமிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக இருப்பது தகுதியற்றது என பௌத்த விகாரை கட்டளை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் கடந்த கால அரசாங்கம் இதனை இரத்து செய்திருந்தது. பஸ்நாயக்க நிலமேயின் பதவிக்காலம் 5 வருடங்களாகும், அதனை மேலும் இரு வருடங்களாக நீடிப்பதற்கு ஜனாதிபதிக்கு அங்கீகாரம் காணப்படுகின்றது.

இந்த நடைமுறை கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் அவற்றை அதிகாரமற்றதாக மாற்றுமாறு ஜனாதிபதி புத்தசாசன அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.