அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றிய இடைக்கால நிர்வாகக் குழு தெரிவு
பல்கலைக்கழகங்களில் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி 2 நாள் வதிவிட செயலமர்வு கடந்த 7,8 ஆம் திகதிகளில் பேருவளை ஜாமியா நளீமிய்யா வளாகத்தில் அமைந்துள்ள அபிவிருத்தி ஆராய்ச்சிக்கும் பயிற்சிக்குமான நிலையத்தில் (ADRT) வைத்தியர் றியாஸ் காசிமின் தலைமையில் நடைபெற்றது.
செயிலான் முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் (AMYS) அனுசரணையோடு நடந்த இவ்வதிவிட பயிற்சிநெறி அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினால் (AumsA) ஏற்பாடு செய்யப்பட்டது.
நாடு முழுவதும் அமைந்துள்ள அரச பல்கலைகழக முஸ்லிம் மஜ்லிஸ்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 30 மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வளவாளர்களாக பொறியியலாளர் ரீஸா யஹ்யா, அஷ்ஷெய்க் ரவுப் ஸெய்ன், அஷ்ஷெய்க் மஸ்ஹுதீன் இனாமுல்லாஹ் மற்றும் அஷ்ஷெய்க் S.H.M. பளீல் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாடியதுடன், கலந்துரையாடல்கள் மற்றும் கேள்வி – பதில்கள் மூலம் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றல்களை வெளிக்கொணர்ந்தனர்.

செயலமர்வின் இறுதியில் ஒன்றியத்திற்கான இடைக்கால நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது .இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் சகல பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய புதிய நிறைவேற்றுக் குழு தெரிவு செய்யப்படுவதுடன் அதன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிக்கப்படும் என இடைக்கால நிர்வாக குழுவால் தீர்மானிக்கப்பட்டது.
Post a Comment