Header Ads



பராயமடையாத சிறுமியை, அமைச்சர் ராஜித்தவின் மகன் கடத்திவைத்துள்ளதாக முறைப்பாடு (வீடியோ)

பராயமடையாத தமது மகளை அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இரண்டாவது மகன் கடத்திச் சென்று பலவந்தமாக தடுத்துவைத்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கொழும்பில் இன்று 15-03-2015 நடந்த ஊடகவியலாளர் மாநாடொன்றில் வைத்தே குறித்த சிறுமியின் பெற்றோர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமைச்சுக்குரிய வாகனமொன்றில் வந்த அமைச்சர் ராஜித சேனாரத்னவின் புதல்வர் தமது மகளை கடத்திச் சென்றதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர்.

அமைச்சர் ராஜிதவின் 2 ஆம் புதல்வரான 27 வயதன ஹர்ஜித் சேனாரத்னவே 17 வயதான தினிதி ஆலோகா ரனசிங்ஹ எனப்படும் தமது மகளை தடுத்து வைத்துள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் தொடர்பில் , 2014 ஆம் ஆண்டு , ஏப்ரல் மாதம் கறுவாத்தோட்டை பொலிஸிலும் , அதே வருடம் ஒக்டோபர் மாதம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இம்முறைப்பாடு குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையெனவும், தாம் இது குறித்து 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாகவும் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்,.

 தமது மகளை முதலில் இலக்கம் 85/டி , ஹெக்டர் கொப்ஹேகடுவ மாவத்தை கொழும்பு என்ற முகவரியில் தடுத்து வைத்திருந்ததாகவும் , பின்னர் அவர் வேறொரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. பராயமடையாத சிறுமி என்கின்ற வார்த்தை பொருத்தமில்லை. சட்டரீதியான திருமண வயதான 18 ஐ அடையாத யுவதி என்பதே சரியான பிரயோகம் ஆகும்.

    ராஜிதவின் மகனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும், இது தவறு என்று நாம் கூறினால், நமக்கு மட்டும் தேவை என்றால் 6 வயது சிறுமியை திருமணம் செய்ததை நியாயப் படுத்துகின்றோமே என்று நம்மீது குற்றச் சாட்டு வைக்கின்றார்கள். தோழர் செம்பிறையிடம் இதனை சொல்லப்போய் ஒருவர் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.

    ReplyDelete

Powered by Blogger.