Header Ads



கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சர்வதிகாரமா..?


-உடையான்-

கல்முனை  அஷ்ரப்  ஞாபகார்த்த  வைத்தியசாலை  தென்கிழக்கு மக்களின் உயிர்நாடியான ஒரு மருத்துவமையம்.இந்த வைத்தியசாலையின் மூலம் பொதுமக்கள் கணிசமானளவு    வைத்திய  சேவையைபெற்றுவருகின்றனர்.

24 மணி நேர சேவையினை  வழங்கிவருகின்ற  நிறுவனத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவைசெய்கின்ற அதிகளவான உத்தியோகத்தர்களும்  ஊழியர்களும் இருக்கின்றனர். ஆனால் ஒரு சில உத்தியோகத்தர்களது  முறையற்ற  செயற்பாடுகளும்,தொடர்பாடலும்   வைத்தியசாலையில்  வழங்கப்படும் சேவையின்  பெறுமதியை  மக்களிடையே இல்லாமல் செய்கின்றன.

அந்த வகையில் இன்று 2015 march 18 புதன் கிழமை எக்ஸ் கதிர்ப்படப்பிடிப்பு  செய்யும் பிரிவில்  மாலை  ஆறு பதினைந்து  மணியளவில் தலையில் அடிபட்ட ஒன்றரை  வயது  சிறுவன் ஒருவனை கதிர்ப்படம் பிடிக்க கொண்டுசென்றிருக்கின்றனர்.தலையில் பாரிய காயத்துடன் கொண்டுவரப்பட்ட சிறுவன்  அமைதியிழந்து  அழுது  அடம்பிடித்திருக்கின்றான்.

எனினும் குழந்தையின் தகப்பன் தான்  பிள்ளையினை எப்படியாவது  பிடித்துக்கொள்கின்றேன்    கதிர்வீச்சினை  தடுக்கக்கூடிய  மேலங்கி (lead Apron) ஒன்றினை தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்,அதற்கு  கடமையிலிருந்த கதிர்ப்படப்பிடிப்பாளர்"அதெல்லாம் இங்கு கிடையாது, நீர் பிள்ளையின்   தகப்பன்தானே  படம்பிடிக்க வேண்டும் என்றால்  பிடித்துக்கொள்ளு" என்று  கதிர்வீச்சின் அபாயகரமான  விளைவுகளை  சற்றும்  கருத்தில் கொள்ளாது தான்தோன்றித்தனமாக கூறியிருக்கின்றார். (பிள்ளையின் தகப்பன் முப்பத்திஆறு  வயதானவர்  ஒரு பிள்ளையின் தகப்பன் )

மற்றும்  பாதணிகளை  வெளியே கழற்றிவிட்டு வரும்படி முரட்டுத்தனமாக  உத்தரவிட்டு மிரட்டியிருக்கின்றார்.பிள்ளை சற்று  அமையின்றி ஆடி அசைந்ததற்கு இப்படியெல்லாம் பிள்ளை ஆடினால்  படம்பிடிக்கமுடியாது வெளியே  கொண்டு செல்லுங்கள்  என தாறுமாறாக  சத்தமிட்டிருக்கின்றார்.பிள்ளையின் தகப்பன் மிகவும் பொறுமையாக  பேசி  எப்படியோ  எக்ஸ்  ரே இனை  எடுத்துவிட்டு   விடுதிக்கு சென்றிருக்கின்றார்.

வெளியில்  அங்குமிங்கும்  நடந்த அதே பாதணியுடன் படப்பிடிப்பு  அறையினுள் நடமாடுகின்ற  உத்தியோத்தர்  என்ன காரணத்திற்காக பாதணிகளை  களற்றச்சொல்கின்றார்?அவர்களது  பாதணிகளில்  பட்டிருக்கின்ற அழுக்குகளை  நோயாளரும் மற்றவர்களும்  மிதிக்க வேண்டுமென்பதற்காகவா?இது எந்தவகையில்  நியாயம்?

மக்களின் வரிப்பணத்தில் ஊதியம்பெறும் அரச ஊழியர்கள் சேவை  நாடிவருபவர்களை  சர்வாதிகாரமாக நடாத்துவது  கண்டிக்கத்தக்கதோர்   விடயமாகும்.

இவர்போன்ற  நோயாளர்களுடனும் உறவினர்களுடனும் தகாத முறையில் நடந்துகொள்ளும் உத்தியோகத்தர்களுக்கு  பொதுமக்களுடன் உரையாடுவது  எப்படி என்ற  தலைப்பின் கீழ் விசேட வகுப்புக்கள் நடாத்த வேண்டும்,மட்டுமன்றி இவர்கள் மூலமாக தரமான சேவையை மக்களுக்கு வழங்க அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிருவாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

6 comments:

  1. இது சம்பந்தமாக உரிய அதிகாரிகள் விசாரணை நடாத்தி அந்த அதிகாரி குற்ற வாளியாக இருந்தால் உடனடியாக அந்த அதிகாரிக்க எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. இக்கருத்து மிகவூம் முக்கியமானது இவ்வைத்திசாலைக்கு நான் பலமுறை சென்றுள்ளேன் ஒர் இரானுவ முகாமில் அல்லது ஒரு குற்றம் செய்தவனை பொலிஸ் நிலையத்தில் விசாரிப்பது போன்று எனது வயதான தந்தையை அனுமதிக்க கூட்டிச் சென்ற போது ஒரு பயிற்ச்சி வைத்தியர் விசாரித்தார் இதற்கிடையில் நான் ஒரு முதுமானிப் பட்டம் பெற்றவன் எனது சகோதர்களில் ஒருவர் கொழும்பிலுள்ள பிரபல வைத்தியசாலையில் வைத்தியர் நான் நினைத்துப் பார்த்தேன் அன்று நான் சாதாரண உடையில் இருந்ததால் இந்த உறுக்கு என்று எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பாமர மக்கள் வந்தால் அவர்களுக்கு எவ்வாறு விசாரணை நடக்கும் என்று நிலைமையை சமாழித்து நோயாளிக்கு முன்னால் தகுயற்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பதும் சமுகத்தின் நிலையை நினைத்தும் வருத்தத்துடன் திருப்பினேன் இந்த வைத்தியசாலை ஊழியர்களில் சிலர் நன்னடத்தை உடையவர்கள் எனினும் சிலரின் நடவடிக்கைகள் மிகவூம் கவலையை ஏற்படுத்துகின்றது உண்மையில் இவர்களுக்கு நோயாழிகள் உளவியல் பயிற்ச்சி அளித்தலும் நிறுவாகமும் வழங்கப்படுதல் சிறந்தது

    ReplyDelete
  3. இலங்கை நிருவாகத்தில் மிகமோசமான இடமாக வைத்தியசாலைகள்தான் அதிகமுள்ளது.
    மக்களுக்காகவே அவர்கள்,அவர்களுக்காக மக்களில்லை.நம் வரிப்பணத்தில் பிச்சி எடுக்கும் இந்த தரம்கெட்ட ஊழியர்களை வெளியுலகிற்கு கொண்டுவரணும்.

    மிகப்பெறிய ஆட்சியாளன் மகிந்தயையே மக்கள் மாற்றிவிட்டனர்,இவர்கள் ஒன்ரும் பெறும் பருப்பில்லை. கற்றறிந்த இந்த நவீன இலத்திரனியல் காலத்தில்,இப்படியான ஊழியர்களின் அற்பமான அறுவருக்கத்தக்க,மனிதாபிமானமற்ற செயல்களை கண்டு அமைதியாக இருக்க வேண்டாம் தயவுசெய்து.

    எங்கேயும் எவனுக்கும் மேலே ஒரு பெறிய பொருப்பதிகாரி இருப்பார்,அவரிடம் முறையாக பிரதிகள் எடுக்கப்பட்ட புகாரை கையளித்து அதனை 2 வாரங்களுக்குள் காத்திருந்து பிந்தொடெருங்கள்.

    எந்த முட்டிவும் எட்டப்படாதவரையில் அடுத்த புகாரையும் பிரதிகள் எடுக்கப்பட்டதாக அதற்கடுத்த மேலதிகாரிக்கு ஏற்கனவே அளித்த ஆனால் பதிலளிக்கப்படாத பிரதியையும் இணைத்து அணுப்புங்கள். இப்படி நாட்டின் ஜனாதிபதிவரைக்கும் ஒரு விடயத்தை அடிக்கொன்டே போகலாம்,

    மேலும் இவைகளை பெறிதுபடுத்த சமூகவலைத்தலங்களிலும் பிரதிசெய்யலாம்.

    மகப்பேற்று நிபுணர் டாக்டர் சரவனன் தொடெர்பான இரு புகார்களையும் நாம் இணையத்தில் படித்தோம்,அதற்கு எதிர்க்கருத்தையும் அவரும் இட்டிருந்தார் ஆனாலும் நம்பக்கூடியவையல்ல அவரின் கருத்து.

    ReplyDelete
  4. mukkiyamaka solla ponal intha waithiya salail welai seyum uliyarkalin perum palanorkalin nadaththai miha mosamanathu. thayawu seithu intha uliyarkalukku ulukkathai kattrukodukka wendum intha arasu.

    ReplyDelete
  5. An important message for JaffnaMuslims Admin.....

    Inda news la irukkura unmai thanmaya konjam kooda paarkama than inda news a Jaffnamuslims admin publish panni ikiringa.
    Jaffnamuslims ndradu enna oru kuppai thottiyaa.
    Yarukku wendhmanalum wendiya news a publish panna aeluma.......
    Idu Anna social service ah illa enfada society a alikkira welayaaa.........
    We can bring this issue to the Human rights commission Against JaffnaMuslims and the person who send this news.
    At least you should contact the Medical Superintendent or the regarding officer of Ashraff Memorial hospital.
    Kanda kanwan ellam comments pottu edukku inda wishayatha thewallama perisakkuringa.........

    ReplyDelete
  6. Thay wu seithu atharathudan publishe seingal entha news irunthalum sari mobile recording mulam or vidos mulam any newsa irrunthalum, intha waithiya salaiyl ithe mathiriyan vesayankal nadakkirathu. atharathudan publish panninal mihavum stronga irrukkum intha news.

    ReplyDelete

Powered by Blogger.