Header Ads



தேர்தலுக்கு தயாராகுங்கள் - ஜனாதிபதி மைத்திரி உத்தரவு

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்கு தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்தில் நேற்றிரவு 16-03-2015 கலந்துகொண்ட ஜனாதிபதி இந்த விடயத்தினை குறிப்பிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் என்ற ரீதியில் எதிர்வரும் தேர்தலுக்கு தலைமைவகிக்கவுள்ளதாக, ஜனாதிபதி குறிப்பிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.