ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம், முக்கிய அமைச்சரை பிரதமராக நியமிக்க முயற்சி
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் கடந்த பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட திறைசேரி பிணைப்பத்திர ஏல விற்பனை தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாரியளவில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிணைப்பத்திர விற்பனை தொடர்பிலான மோசடிகளுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமென கோரியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வரும் முக்கிய அமைச்சர் ஒருவரை பிரதமராக நியமிக்க சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment