Header Ads



நாட்டுக்கான பொறுப்பினை நிறைவேற்ற தவறியமையே காழ்ப்புணர்வுக்கு காரணம் - யூசுப் முப்தி

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் இனால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட “ஆண்மீக ஊக்குவித்தலுக்கும் முதலாம் வருட மாணவர்களை வரவேற்றலுக்குமான”(Motivational & Freshers’ welcome Function)  நிகழ்வானது முப்தி யூசுப் ஹனிபா அவர்களின் விஷேட சொற்பொழி பல்கலைக்கழ உயிரியல் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருந்தொகையான ஆண், பெண் முஸ்லிம் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு முப்தி அவர்கள் உரையாற்றுகையில்,

1. கல்வி கற்றல் என்பது தகவல் சேகரிப்பாக அன்றி மாற்றத்தின் திறவுகோலாக இருக்க வேண்டும் (Learn, not to Information but to Transformation) எனவும்,

2. கற்றல் என்பது உழைப்பதற்கான ஊடகமன்றி சேவை செய்வதற்கான தோற்றுவாய் (Learn, not to Gain but to Service) எனவும்,

3. கல்விப் போராட்டம் என்பது உரிமையை வென்றெடுக்கவல்ல மாறாக கடைமையை தெரிந்து நிறைவேற்ற(Education is, not to bargain Rights but to do our Obligation) எனவும்,

4. நாட்டுக்கான எமது பொறுப்பு என்ன????(What do we have to do for this Country) அதை நிறைவேற்ற தவறியமையே எமக்கான காழ்ப்புணர்வை தூண்டியது எனவும்,

5. இஸ்லாம் என்பது அடையாளம் அல்ல அது பன்பாடாகும்.(Islam is not Identification that is Behavior) எனவும்

பல்வேறு விடயப்பரப்புகளை உள்ளடக்கி உணர்வுபூர்வமாக உரைநிகழ்த்தினார்.

· விஷேடமாக பென்களுக்கான செய்தியாக தாம் சிறந்த கல்விமங்கைகள் என்ற பெறுமையை விட சிறந்த தாயாகவும் சிறந்த மனைவியாகவும் வாழ்ந்தோம் என்பதே இறைவினிடத்தில் பெறுமைக்குரியதாகும் எனவும் உபதேசம் செய்தார்.

உலகலாவிய ரீதியில் பல்வேருபட்ட ஆய்வுகளுக்காக பல பல்கலைக்கழகங்களுக்கும் சென்றுள்ள முப்தி அவர்கள் தனது அனுபவங்களையும் அங்கு பகிர்ந்து கொள்ள தவரவில்லை.

இவ்வாரான ஓர் நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் இனால் ஏற்பாடு செய்யப்பட்டமையை இட்டு தான் சந்தோசமடைவதாகவும், எதிர்காலங்களில் முஸ்லிம் அல்லாதவர்களையும் இணைத்துகொண்டு பல்வேறு பொதுவான தலைப்புக்களில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் எமது நற்பண்பாடுகள் தொடர்பாக சிறந்த புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்த முடியும் என ஆலோசனை வழங்கியதுடன் அதற்கு தேவையான உதவிகளையும் தான் அல்லாஹ்வின் உதவியுடன் பெற்றுத்தறுவதாகவும் உறுதியளித்தார். மாஷாஅல்லாஹ்.

மேலும் இந்நிகழ்வில் உரைநிகழ்த்திய மஜ்லிஸ் இனுடைய சிரேஷ்ட பொருளாளர் பேராசிரியை திருமதி என்.சலீம் அவர்கள், முஸ்லிம்கள் பிற மதத்தவர்களோடு நடந்து கொள்ள வேண்டிய முறை தொடர்பில் விளக்கமளித்தார். 

முஸ்லிம் மஜ்லிஸ் இனுடைய தற்போதைய தலைவர் முஹம்மட் றிபான் அவர்கள் மஜ்லிஸ் இன் கடந்தகால செயற்பாடுகள், அடைவுகள் தொடர்பாக விளக்கமளித்ததுடன் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் அதற்கான சகோதரர்களின் பங்களிப்பு தொடர்பிலும் பொறுப்புடன் பேசிச் சென்றார்.

இந்நிழ்வானது சமூக மற்றும் உள்ளக ரீதியாக பல்வேறு ஆக்கபூர்வமான விடயங்ளில் பங்காற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் இன் மற்றுமொரு பதிவாகும்.

தகவல் வீ.டீ.எம்.இம்றாத்

1 comment:

  1. Mashallah meaningful step.

    Our community should utilize Usuf Mufthi to maximum thorough out the island.
    very pragmatic words.

    well done uni masjith.

    ReplyDelete

Powered by Blogger.