Header Ads



தேசிய நிறைவேற்று சபை, இரண்டாக பிளவுபட்டது

தேர்தல் முறையில் மாற்றம் செய்த பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை காரணமாக தேசிய நிறைவேற்று சபை இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.

தேசிய நிறைவேற்று சபையின் அண்மைய கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக யோசனை முன்வைக்கப்பட்ட போது எதிராகவும் ஆதரவாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதால், இறுதி தீர்மானத்திற்கு வர முடியாமல் போனதாக தெரியவருகிறது.

தேர்தல் முறையில் மாற்றம் செய்யாது, உறுதியளிக்கப்பட்டது போல், 100 நாள் முடியும் ஏப்ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஏனைய சில சிறிய கட்சிகளும் யோசனை முன்வைத்துள்ளன.

எனினும் அரசாங்கத்தை ஏற்படுத்த உதவியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களும், ஜாதிக ஹெல உறுமய கட்சியை சேர்ந்தவர்களும் தேர்தல் முறையை மாற்றிய பின்னர் தேர்தலை நடத்தலாம் எனவும் அதற்கு 100 நாட்கள் போதவில்லை எனில் தேவையான காலத்தை எடுத்து கொண்டு அதனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

அதேவேளை நிறைவேற்று சபையில் எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படுவதால், சபையை நடத்திச் செல்வதில் தடையேற்பட்டுள்ளதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.