Header Ads



முஸ்லிம்களை கண்டுகொள்ளாத சர்வதேசமும், முஸ்லிம் அரசியல் வாதிகளும்..!


(சத்தார் எம் ஜாவித்) 

மூன்று தஸாப்த யுத்த சூழ் நிலைகளுடன் சுமார் 60 வருட கால அடக்கு முறைக்குள்ளான தமிழ் மக்களைப்போல் வடகிழக்கு முஸ்லிம் மக்களும் பலவாறும் பாதிக்கப்பட்டவர்களாகும்.

1985ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்தை குறிப்பிடலாம். இக்கால கட்டம் ஆயுதம் ஏந்திய குழுக்கள் வளர்ச்சியடைந்த காலமாகும். இந்த ஆரம்பம்கள் பேரழிவிற்கு வித்திட்ட காலமானதால் இதனால் வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களையும் யுத்தப் பேரழிவு விட்டு வைக்கவில்லை.

தமது பூர்வீகத்தில் அமைதியாக வாழ்ந்த    சமுகத்தை விடுதலைப் புலிகள் பூண்டோடு ஆயுத முனையில் வடகிழக்கை விட்டு துரத்திய  சம்பவமானது முற்றிலும் இனச் சுத்திகரிப்புச் செய்த வரலாற்றினை  முஸ்லிம்களால் இன்று ஜீரணிக்கவோ அல்லது நினைத்துப் பார்க்கவோ முடியாத துர்ப்பாக்கிய நிகழ்வாகவே அமைந்துள்ளது.

இவ்வாறு விடுதலைப் புலிகாளல் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்ட முஸ்லிம்கள் 24 மணி நேரத்தினுல் எங்கு செல்வது? என்ன செய்வது? என்று தெரியாது தவிர்த்த மக்கள் தமது பூர்வீகத்தை  கண்ணீரோடு விட்டு விட்டு தென்பகுதியில் தஞ்சமடைந்த அந்த காரிருள் சூழ்ந்த அந்த துன்பகரமான  1990ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாத இறுதிக் காலத்தை ஒவ்வொரு வினாடியும் முஸ்லிம்களின் மனங்களில் இருந்து   அகலாத நினைவலைகளாகவே இன்றும் ஏக்கத்துடன் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது என்றே கூறலாம்.

இவ்வாறு ஒரு சமுகத்தையே பூர்வீகத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்ட அந்த மாபெரும் தவறை ஆயுதக் கலாச்சாரம் கொண்ட விடுதலைப் புலிகளின் வடகிழக்கு இனவாதமே 1990இல் செய்யப்பட்ட இனச் சுத்திகரிப்பாகும்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த அந்த மாபெரும் மனித உரிமை மீறல் சம்பவத்தை இன்று வரை சர்வதேசம் கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளாது அவ்வாறானதொரு சம்பவம் இடம் பெற்றதா? என்ற நிலைமைகள் கூட அறிந்திராது இருப்பதானது பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுகத்தை வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் விடயமாகவே உள்ளது.

முஸ்லிம் சமுகத்தின் மேற்படிப் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபை கண்டு கொள்ளாது இருந்த விடயமும் இன்று முஸ்லிம் சமுகத்தை சர்வதேசத்தின் நம்பிக்கையில் இருந்து விலகிச் செல்வதற்கும் வழிவகுத்துள்ளது.

காரணம் யுத்த காலத்திலும் யுத்த நிறுத்தங்கள் மேற் கொள்ளப்பட்ட இரண்டாயிரமாம் ஆண்டுகள் அதற்குப் பின்னரான காலங்களில் சர்வதே ரீதியாக இன்பிரச்சினை விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்காக நோர்வே உள்ளிட்ட நாடுகள் முன் வந்து பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்தியும் அதனால் தமிழ் மக்களுக்கும் பயனில்லை முஸ்லிம் மக்களுக்கும் பயனில்லை என்பதுடன் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் எல்லாம் புறக்கணிக்கப்பட்ட விடயங்கள் அதிகமாகவே காணப்பட்டன.

வடகிழக்கில் தமிழ் மக்கள் எந்தளவில் படையினரால் பாதிக்கப்பட்டார்களோ அதைவிட மேசமானதொரு விடயமாகவே எந்தவித மண்ணிப்பும் இன்றி சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் என்று பாராது விடுதலைப்புலிகள் முஸ்லிம் சமுகத்தை விரட்டிய விடயத்தை குறிப்பிடலாம். இலங்கை அரசாங்கமும் கூட கண்டு கொள்ளாது மறந்து விட்ட  நிலைமைகள் மற்றுமொரு வேதனை தரும் விடயமாகவே உள்ளது.

வடகிழக்கு முஸ்லிம் சமுகத்தின் பிரச்சினை சர்வதேசப் படுத்தப்படாததும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும் அதற்கு உடந்தையானவர்களில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகளும் பதில் சொல்ல வேண்டியவர்களில் முக்கியமானவர்களாலும். ஆவர்களும் வடமாகாண முஸ்லிம் மக்கள் விடயத்தில் துரோகம் இழைத்து விட்டனர் என பாதிக்கப்பட்ட மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

அதிகளவில் பாதிக்கப்பட்ட சமுகமாக வடக்கு முஸ்லிம் சமுகம் காணப்படுகின்றனர் இவர்கள் இன்று வரை சுமார் 25 வருடங்களைத் தாண்டும் நிலையில் கடந்த கால அரசாங்கங்களுடன் ஆட்சியில் பங்காளிகளாகவும் பல்வேறுபட்ட அமைச்சுப் பொறுப்புக்களைக் தம்வசப்படுத்திக் கொண்டிருந்தும் கூட பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம் சமுகத்திற்கு உதவவோ அல்லது முஸ்லிம் சமுகம் சார்பாக சர்வதேசத்திற்கு குரல் கொடுக்கவோ கையாலாகாதவர்களாக இருந்துள்ளமை முஸ்லிம் சமுகத்திற்கு இன்று வரை கேடாகவே காணப்படுகின்றது.

கடந்த மூன்று தஸாப்த கால யுத்த வெற்றியின் பின்னர் சிறுபான்மைக்குள் கிடைத்த பாரியதொரு வெற்றியாக வடக்கு தமிழ் மக்களுக்கு வடமாகாண சபை கிடைத்துள்ளமையாகும். இதேபோல் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் சமுகத்திற்கு சிறிய வெற்றி கிடைத்தும் அதுவும் தற்போது கைக்கெட்டியது வாய்க்கெட்டாத கதையாக தளம்பல் நிலையில் இருந்து கொண்டிருப்பதும் முஸ்லிம் சமுகம் அரசியலில் இருந்து  ஒதுக்கப்படும் விடயமாகவே நோக்கப்படுகின்றது.

இதற்கெல்லாம் மற்றுமொரு காரணமாகவே முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம் சமுகத்தை சமுக நலன் கருதி ஒற்றுமைப்படுத்தாது சுயநலன்களுக்கும், அரசியல் இலாபங்களுக்கும் விலை போனதும் தமக்குள் சிறு சிறு குரோதங்களுக்காக சண்டையிட்டுக் கொண்டமையின் விளைவுகள் இன்று முஸ்லிம் சமுகத்தை விழ்ச்சிப்பாதைக்கு இட்டுச் சென்றமையே மிச்சமாகும்.

இன்று தமிழ் மக்களின் பிரச்சனைகள் சர்வதேச மயப்படுத்தப்பட்டு அவர்களுக்கு நீதி நியாயங்கள் கிடைக்க வேண்டும் அதற்கு சர்வதேச விசாரைணகள் தேவை என்ற முன்னேற்றங்களும் முனைப்புக்களும் வடக்கு முஸ்லிம்களின் விடயத்தில் மழுங்கடிக்கப்பட்டு உள்நாட்டில் இடம் பெறும்  அடிப்படை உள்நாட்டு விசாரணைக்குக் கூட அருகதையற்ற ஒரு சமுகமாக முஸ்லிம் சமுகம் ஓரங்கட்டப்பட்ட ஒரு சமுகமாக வாழ்ந்து கொண்டிருப்பதும் வேதனை தரும் விடயங்களே.

ஒரு ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகளில் ஒன்றே வாழ்வுரிமை இந்த உரிமையை மறுப்பதென்பது மிகவும் மோசமானதொரு மனித உரிமை மீறலாகும். இவ்வாறானதொரு விடயத்தை 25 வருடங்கள் கடந்தும் அது தொடர்பாக எந்தவித விசாரணைகளோ அல்லது குற்றப்பத்திரிகைகளோ சுமத்தாது அந்தச் சமுகத்திற்கு நீதி, நியாயங்கள் பெற்றுக் கொடுக்காது கைவிடப்பட்டிருப்பதும் கூட முஸ்லிம் சமுகம் மீது மேற் கொள்ளப்பட்டுள்ள மனித உரிமை மீறலாகவே நோக்க வேண்டும்.

வடக்கில் தமிழ் மக்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் தமிழ் அரசியல் வாதிகளும் கூட தொப்புள் கொடி உறவுள்ள ஒரு சமுகத்தின் பிரச்சினைகளை தமது மக்களுடன்  இணைத்துக் கொள்ளாது பாராமுகங் காட்டுவதும் தனித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முனைவதும் எதிர் காலத்தில் வடகிழக்கில் சிறுபான்மையினர் என்ற வகையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழலாம் என்பது பகற்கனவாகவே அமையும்.

பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் சமகாலத்தில் இரு சமுகங்களும் இணைந்து தமது பிரச்சினைகளுக்கான நீதி, நியாயங்களை பெற்றுக் கொள்ள முனையும்போதே அதில் ஒரு நிரந்தரமான வெற்றியை அடையலாம்.

மாறாக வடக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகளை மட்டும் தீர்வுக்காக அல்லது நீதி, நியாயங்களுக்காக முன் வைக்கப்படுமாயின் அது எந்தளவு தூரம் வெற்றியைத் தரும் என்பதனை விட மேற்படி இரு சமுகங்களுக்கும் இடையில் விரிசல்களையும், பகைமை உணர்வுகளையுமே தோற்று விக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இன்று இலங்கையில் இருக்கும் அரசியல் நிலைமைகளை எடுத்து நோக்கும்போது சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளின் தீர்வில் அவ்வளவு அக்கறை செலுத்தும் நிலைமைகள் இல்லை மாறாக தட்டிக் கழிக்கும் அல்லது காலதாமதம் செய்யும் ஒரு வகையான நிலைமைகளையே நாம் காணக் கூடியதாகவுள்ளது.

இவ்வாறனதொரு துர்ப்பாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட சமுகங்கள் என்ற வகையில் இரு சமுகங்களுக்கும் ஏற்பட்டிருந்த அநீதிகளுக்கு தூர நோக்குடனான திட்டமிட்ட செயற்பாடுகளே காலத்தின் தேவையாகும். இந்த விடயத்தில் அரசியல் தலைமைகள் தமது கடந்த கால பகைமை உணர்வுகளை புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையாக புரிந்துணர்வுகளுடன் முன்னோக்கி நகரவேண்டியதே முக்கியமானதாகும்.

இதேவேளை ஒவ்வொரு வருடமும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு நடைபெறுகின்றது அதில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயங்கள் முதன்மை பெறுகின்றது. குறிப்பாக இம்மாதம் நடைபெறும் மாநாடு மனித உரிமை மீறல்களுக்கு தீர்வாக அமையும் என ஒவ்வொரு நாடுகளும் நினைத்தாலும் அது எதிர்பார்த்தளவிற்கு பயனுறுதி வாய்ந்ததாக அமைவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் அதிகமாக முன்வைக்கப்படுகின்றதையும் அவதானிக்க முடிகின்றது.

எனவே கடந்த காலங்களைப் போல் இனவாதம், மதவாதம்  காட்டாது பாதிக்கப்படவர்கள் என்ற வகையில் முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளமையை கருத்திற் கொண்டு புலிகளால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் வாழ்வியலை உறுதிப்படுத்தி அம்மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என வடமாகாண முஸ்லிம்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

1 comment:

  1. முஸ்லிம்களின் பிரச்சினையை சர்வதேசம் கண்டுகொள்ளவில்லை என்று பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவதை விட, முஸ்லிம் நாடுகளே கண்டுகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

    இராக், சிரியா, பாலஸ்தீன் என்று இங்கே உள்ள முஸ்லிம்கள் துடிக்கின்றார்கள், சஞ்சிகைகளில் பந்தி பந்தியாக எழுதுகின்றார்கள், ஆனால் முஸ்லிம் நாடுகளில், குறிப்பாக அரபு நாடுகளில் இருப்பவர்கள், இலங்கை, இந்தியாவில் வாழ்பவர்களை முஸ்லிம்கள் என்ற மதிப்பதில்லை, அது மட்டுமா, மனிதர்கள் என்றே மதிப்பதில்லை.

    பேசினால் சகோதரத்துவம், ஆனால் எந்த ஒரு இலங்கை ஆணுக்கும் ஒரு சவூதி பெண்ணை திருமணம் செய்ய முடியுமா? ஒரு நாளும் முடிக்க மாட்டார்கள், அந்த ஏற்றத்தாழ்வு என்றைக்கும் உள்ளது. ஆனால் வெள்ளைக்காரர்களை திருமணம் செய்த எத்தனையோ இலங்கையர்கள் உள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.