மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரன விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது - மங்கள சமரவீர
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரன விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சொத்து குவிப்பு தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக திரட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான சில தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ அண்மைக்காலமாக விடுத்து வரும் அறிக்கைகளுக்காக விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்ததாகவும், ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ அரசியலில் மீள ஈடுபடுவதனை எவரும் தடுக்கவில்லை எனவும் அவர் விரும்பினால் அரசியலில் ஈடுபட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மறுபுறத்தில் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டு ஊள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஸவினால் திருடப்பட்ட சொத்துக்களை பின்தொடர்கின்றோம் என்பது உண்மைதான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட மாட்டாது எனவும், யுத்தம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு விடயங்களும் இரு வேறுபட்டவை என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் சொத்துக்கள் களவாடப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடத்திய விசாரணைகளின் மூலம் பல பில்லியன் ரூபா பணம் பற்றிய விபரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Post a Comment