மகிந்த தேர்தலில் போட்டியிட்டால், சுதந்திரக் கட்சி பிளவுபட்டு, தோல்விக்கு காரணமாக அமையும்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால், கட்டாயம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுப்படும் எனவும் அது கட்சியின் தோல்விக்கும் காரணமாக அமையும் எனவும் முன்னாள் பிரதமரும் சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலைவர்கள் கூறுவதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சி ஆகிவிடாது. தற்போது அப்படி எதுவுமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தற்போது ஆளும் கட்சியில் உள்ளது. மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கூட்டங்களில் நான் கலந்து கொள்ள போவதில்லை.
மக்கள் அது சம்பந்தமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளனர். மக்களின் அந்த தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன். மகிந்த பிரதமர் வேட்பாளராக போட்டியிட வேண்டுமாயின் அங்கீகரிக்கப்பட்ட முறைகள் உள்ளன. முதலில் அவர் கட்சியில் வேட்புமனுவை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னரே தேர்தலில் போட்டியிட வேண்டும். கட்சியின் ஊடாக வேட்புமனுவை பெற்றுக்கொண்டு வந்தால், மகிந்தவை பிரதமர் வேட்பாளராக போட்டியிட வைப்பது பற்றி ஆராய்ந்து பார்க்கலாம் எனவும் விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இப்படி நல்ல புத்திகள் சொல்வதற்கு உங்களைப்போன்ற பெரிசுகள் முன்வராமையும் அதைக் கேட்பதற்கு அவருக்கு விருப்பம் வராமையும் கூட அவரது தோல்விக்கும் அவமானத்திற்கும் காரணம்தான்.
ReplyDeleteஅவரை இன்று வழிநடாத்துபவர்கள் அனைவருமே சுயநலக்கோழைகளே.
The one who divided all parties in SL such as JVP, SLMC, UNP, like that now he is trying to divide SLFP it is normal thing in the past.
ReplyDeleteThe one who divided all parties in SL such as JVP, SLMC, UNP, like that now he is trying to divide SLFP it is normal thing in the past.
ReplyDelete