Header Ads



மனிதக் கால்கள் மர்மம் தொடருகிறது - மோப்ப நாய் உதவியுடன் கைதான பெண் தகவல்கூற மறுப்பு

-Vi-

தெமட்­ட­கொடை - சிறி­தம்ம மாவத்­தையில் உள்ள வடிகான் ஒன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்ட மனிதக் கால்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் பொலி­ஸா­ரினால் விரி­வு ­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அந்த கால்கள் காணப்­பட்ட இடத்தில் இருந்த தட­யங்­களை வைத்து பொலிஸ் மோப்ப நாயின் உத­வி­யுடன் பெண்­ணொ­ருவர் கைது செய்­யப்­பட்ட நிலையில் சம்­பவம் தொடர்பில் தக­வல்­களை மறைக்கும் குற்றச்சாட்­டுக்­காக அவரை நேற்று நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்தி எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் குறிப்­பிட்­டது.

கடந்த சனிக்­கி­ழமை தெமட்­ட­கொடை - சிறி­தம்ம மாவத்­தையில் உள்ள வடிகான் ஒன்­றி­லி­ருந்து இரு கால்கள் பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டன. 119 அவ­சர தொலை­பேசி அழைப்­பூ­டாக தெமட்­ட­கொடை பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வல்­களின் அடிப்­ப­டை­யி­லேயே இவ்­வி­ரண்டு கால்­களும் மீட்­கப்­பட்­டன. மீட்­கப்­பட்ட இவ்­விரு கால்­களும் ஆணொ­ரு­வ­ரு­டை­யது என சந்­தே­கிக்­கப்­படும் நிலையில் முழங்­கா­லுக்கு கீழ் அவ்­விரு கால்­களும் வெட்­டப்­பட்­டி­ருந்­தன.

இந்நிலையில் புதுக்­கடை நீதி வான் நீதி­மன்ற நீதி­பதி ஸ்தலத்தை வந்து பார்­வை­யிட்­டதை தொடர்ந்து அவ்­விரு கால்­களும் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் பிரேத அறையில் வைக்­கப்­பட்­டுள்­ளன. வேறு ஒரு பிர­தே­சத்தில் வெட்­டப்­பட்ட நிலையில் அவ்­விரு கால் களும் அந்த வடி­கானில் போடப்­பட்­டி­ருக்­கலாம் என சந்­தே­கிக்கும் பொலிஸார் அங்­கி­ருந்து தட­யங்கள் சில­வற்றைக் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

அந்த வடி­கானின் அருகில் இருந்து திறப்புக் கோர்வை ஒன்று தெமட்­ட­கொடை பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்ட நிலையில் அதனை மோப்ப நாயிற்கு முகரச் செய்து சந்­தேக நபர்­களை தேடி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இந்நிலையில் குறித்த திறப்புக் கோர்­வையை மோப்பம் பிடித்த பொலிஸ் மோப்ப நாய் அங்­கி­ருந்து 50 மீற்றர் தூரத்தில் இருந்த பெட்­டிக்­கடை ஒன்­றினுள் சென்­றது. இத­னை­ய­டுத்து அந்த பெட்­டிக்­க­டையை நடத்தி வந்த பெண்ணை விசா­ரணை செய்த பொலிஸார் அவரை கைது செய்து மன்றில் ஆஜ­ர்படுத்தி விளக்­க­ம­றி­யலில் வைத்­தனர்.

குறித்த கடைக்கு காலை வேளை யில் தேநீர் அருந்த வந்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரிடம் இரவு வேளையில் அந்த வடிகான் பிர­தே­சத்தில் சத்தம் ஒன்று கேட்­ட­தா­கவும் அங்கு சந்­தே­கத்­துக்கு இட­மான ஏதேனும் இருக்­கலாம் எனவும் குறித்த பெண்ணே முதலில் கூறி­யி­ருப்­பது பொலி­ஸாரின் புலன் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்பில் அப் பெண் ஏதோ ஒரு ரக­சி­யத்தை மறைக்கிறார் என்­ப­தா­லேயே அவரை கைது செய்து மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தாகவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

இந்நிலையில் அப்பெண் குறித்த சம்­ப­வத்­துடன் நேர­டி­யாக தொடர்புபட்­டுள்­ளாரா இல்­லையா என்­ப­தைவிட அச்­சம்­பவம் குறித்து அவர் ரக­சியம் ஒன்­றினை அறிந்­தி­ருப்­ப­தா­கவும் அதனை மறைத்து வருவதாலேயே கைது செய்ததாகவும் பொலி ஸார் மேலும் குறிப்பிட்டனர்.

No comments

Powered by Blogger.