ஆளும் கட்சிக்குள் முரண்பாடு, மைத்திரிக்கு நெருக்கடி, அமைச்சரவை அவசரமாக கூடுகிறது
அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சில முரண்பாட்டு நிலைமைகளை களையும் நோக்கில் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக 19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த 12ம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
19ம் திருத்தச் சட்டத்தை அவசரமாக நிறைவேற்ற வேண்டுமென பிரதமரும் நீதியமைச்சரும் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், அவசரமாக சட்டத்தை நிறைவேற்ற முடியாது எனவும் விவாதம் செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Post a Comment