Header Ads



''வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்'' கத்தார் மாநாட்டில் தீர்மானம்

-நாகூர் ழரீஃப்-

கத்தார் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் (ஃபனார்) 'கருத்து வேறுபாடுகளும் அதைக் கையாள்வதில் இஸ்லாமிய ஒழுங்குகளும்' எனும் தொணிப் பொருளில் ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆதில் தமிழ் பேசும் இலங்கை மற்றும் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆண்கள் பெண்களென பெரும் திரளானோர் கலந்து சிறப்பித்தனர். மேற்படி கருத்தரங்கு சமூகத்தில் புறையோடிப் போயுள்ள இயக்க மற்றும் 'மத்ஹப்' வெறிகளைக் களைந்து, சமூக ஜக்கியத்தை வளர்த்தல் என்ற மையப் பொருளை உணர்த்துவதாக அமைந்திருந்தது. 

இதன் ஏற்பாடுகளை ஃபனாருடன் இணைந்து, SLMQ, SLIC, SLDC ஆகிய இலங்கையர்களின் அமைப்புக்கள் முழுமையான பங்களிப்புச் செய்தன.

கலந்து கொண்டோர்  உள்ளத்தில் சமூக ஒற்றுமையினதும், களத்தில் குதித்துள்ள தஃவா அமைப்புக்கள் மத்தியில் ஏற்படவேண்டிய புரிந்துணர்வும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் எவ்வளவு அவசியமானதும் அவசரமானதுமாகும் என்ற செய்தியைப் புரிந்து கொள்ள பெரிதும் உதவியதாக காணக்கிடைத்தது.

மேற்படி மாநாட்டின் வளவாளர்களாக நாட்டின் தஃவாக் களத்தில் பணியாற்றும் இரண்டு முக்கிய தஃவா அமைப்புக்களைச் சார்ந்த கல்விமான்களும் தலைசிறந்த எழுத்தாளர்களும் பேச்சாளர்களுமான எனது மரியாதைக்குரிய ஜாமிஆ நளீமிய்யாவின் உதவிப் பணிப்பாளர் அஷ் ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களும், பரகஹதெனிய ஜம்இய்யத்து அன்ஸாருஸ் ஸுன்னத்துல் முஹம்மதிய்யாவின்       அழைப்பாளரும் 'உண்மை உதயம்' சஞ்சிகையின் ஆசிரியருமான அஷ் ஷைக் எஸ்.எச்.எம். இஸ்மாஇல் (ஸலஃபி) அவர்களும் பங்கேற்றனர். 

இவ்விருவரதும் பங்கேற்பானது இரு பெரும் தஃவா அமைப்புக்களினதும் ஜக்கியத்தையும் உளமார்ந்த புரிந்துணர்வையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்து. அத்துடன், மற்றுமொரு தஃவா அமைப்பான தப்லீக் ஜமாஅத் சார்பாகவும் ஒருவர் கலந்திருந்தால் இன்னும் மெருகூட்டப்பட்டிருக்கும் என்பது எனது கருத்து. அவ்வமைப்பைச் சார்ந்த அறிஞர்கள் கலந்து கொள்ளாத போதும் அவ்வமைப்புக் பற்றி, அஷ் ஷைக் அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்களது நிபை;பாடு பற்றி மிகத் தெளிவாகவே பேசப்பட்டமை பாராட்டப்பட வேண்டும்.

ஸஹாபாக்கள், இமாம்கள் தமக்கடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் போது நாகரியமாகவும் நயமாகவும் அனுகினர் என்ற அருமையான அனுபவங்கள் பகிரப்பட்டதுடன், இரு அமைப்பக்களிடம் இருந்த ஆரம்பகால அன்னிpயொன்;னியம் சுவாரஸ்யமாக நினைவுபடுத்தப்படது. மார்க்க அடிப்படை (அக்கீதா) விவகாரங்களில் பிழையில்லாத விடயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்லல் அனுமதிக்கப்பட்டதாகும். அத்துடன் இஸ்லாத்தின் அடிப்படை உடன்பாடே அல்லாமல் முரன்பாடு அல்லளூ இதனை உலமாக்கள், தாஇகள், தஃவா அமைப்புக்கள் மற்றும் இஸ்லாத்தில் கரிசனை உள்ள அனைவரும் கவனத்தில் கொள்ளல் வேண்டும் என்று, இம்மாநாடு அனைவரையும் வலியுறுத்தியது.

இஸ்லாத்தின் அடிப்படை விவகாரங்களில் விட்டுக் கொடுப்பும், உப பிரிவுகள் விடயத்தில் விடாப்பிடியாகவும் இருக்கின்றமை கசப்பான ஓர் உண்மையாகும். எனவே, உம்மத்துக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகளை களைய அனுகப்பட வேண்டிய நாகரிகமும் சமூகம் கூறுபடுத்தப்படல் தவிர்ப்பதற்காக அனைவரும் உழைத்தல் வேண்டும் என்ற தீர்மானமும் இங்கு நிறைவேற்றப்பட்டது.

தான் சார்ந்துள்ள இயக்கமும் அதன் செயற்பாடுகளும் மாத்திரமே சிறந்தவை மற்றைய அமைப்புக்கள் வழிகெட்டவை என்ற கருத்தினை நீக்கிக் கொள்வதும், அனைத்து அமைப்பக்களிலும் பல நன்மைகள் காணப்படும் அதே வேளை, மனித சிந்தனைகள் ஊடாக சில தவறுகளும் இருக்கலாம் என்ற அடிப்படை புரிந்து கொள்ளப்பட்டால் இலகுவில் இயக்க வெறியினைக் களையலாம்.

அத்துடன் வளவாளர்கள் கூட, தமக்கிடையே பல வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்ற போதிலும் வேற்றுமையில் ஒற்றுமை காணப்பட வேண்டும் என்ற விவகாரத்தில் ஒன்றுபட்டுள்ளோம் என்பதைப் பகிரங்கமாகவே தெரிவித்தனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவில் வழிகாட்டலில் இயங்கும் அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கிச் செலாற்றும் 'ஒருங்கிணைப்புக்கும் ஒத்துழைப்பிற்குமான குழு' 2009 ஆம் ஆண்டு முதல் செயலாற்றி வருவதும் அதன் சிறந்த முன்னேற்றகரமான சில பணிகளும் ஈண்டு குறிப்பிடப்பட்டன. 

3 comments:

  1. i believe most of the sri lankans would have come to know about this conference only after read this post. most of the people were un aware of this program as the publicity, and notice didnt reach every part of qatar.the organization team must have known that sri lankans and indians are in every nook and corner of qatar.

    ReplyDelete
  2. Masha allah good effort.may allah unite of our umma

    ReplyDelete
  3. If Unity is on the basis of Quran and Saheeh Sunnah and the Way of Salaf us saleheens... Islam welcome it.

    Any unity by compromising any one of above, will lead to devation from the ONE successfull group out of 73 and not question on it.

    " Once the path of Muhammed (pbuh) got cleared to you.. Do not stay away from it. Also follow the way of Muhmeen ( who lived with Muhammed sal). if not step by step will lead to Hell.
    Read Soor Nisa : 115 verse

    May Allah guide us and keep us away from any so called muslim sects present in this world.

    ReplyDelete

Powered by Blogger.