Header Ads



எங்கள் நாட்டு நாணயத்தாளில், சிங்கப்பூர் நாட்டில் பிறந்தவர் கையெழுத்திட இருந்தார்

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன்  மகேந்திரனை அப்பதவிலிருந்து வெளியேற்ற வேண்டுமென வலியுறுத்தும் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி  சில்வா இன்று பாராளுமன்றத்தில் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக பிரேரணையொன்று முன்வைக்கப்படுவதோடு முறைகேடுகள் தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை  செய்யப்பட்ட வேண்டுமென்று வலியுறுத்தப்போவதாகவும்  எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்  உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எங்கள் நாட்டிற்கு  சொந்தமான நாணயத்தாளில் சிங்கப்பூர் நாட்டில்  பிறந்த ஒருவர் மத்திய வங்கி ஆளுநர் என்ற பதவியில் கையெழுத்திட இருந்தார்.

இன்று அவ்வாறு பதவியில் நியமிக்கப்பட்டவர் தான் திறைசேரி பிணை முறிவு விநியோகத்தில்  முறைகேடுகளில்  ஈடுபட்டுள்ளார்.

இதனை விசாரிப்பதற்கு பிரதமர் ஐ.தே. கட்சி சட்டத்தரணிகள் குழுவை நியமித்துள்ளார். இதன் மூலம் நியாயமான விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது அத்தோடு முறைகேடுகளில் ஈடுபட்ட ஒருவர் தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்படும் போது அவசர சேவையிலிருந்து இடை நிறுத்தியே விசாரணை செய்ய வேண்டும். ஆனால் அப்படியான ஒரு நிலைமை இங்கு காணப்படவில்லை.

எனவே மத்திய வங்கி ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அரசாங்கம் அப்பதவியிலிருந்து அவரை வெளியேற்ற வேண்டும். 

இன்று பாராளுமன்றத்தில் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக பிரேரணை முன்வைக்கவுள்ளதோடு  பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து  விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

No comments

Powered by Blogger.