Header Ads



மட்டக்களப்பு - வாழைச்சேனை வைத்தியசாலையில் மனிதாபிமானம் செத்துவிட்டதா..?

-அனா-

உலகத்தில் உள்ள தொழில்களில் மனித உயிரைக் காப்பாற்றக்கூடிய சேவையை செய்யும் தொழிலாக அனைவராலும் சொல்லப்படும் தொழில் என்றால் அது வைத்தியத்துறை என்றால் அதற்கு மாற்றுக் கருத்திற்கிடமில்லை.

தங்களது சுக துக்கம்களுக்கு அப்பால் மனிதனின் உயிரைக்காப்பாற்றுவதற்காக சேவை மனப்பாங்கோடு சேவை செய்வதுதான் சுகாதாரத்துறையினர் அத்துறையில் உள்ளவர்கலே ஒரு கர்ப்பிணித்தாயை இவிரக்கமின்றி வைத்தியசாலையில் இருந்து வெளியே தள்ளிவட்ட சோக சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாழைச்சேனை  ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்துத் தெரிவிக்கையில்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பூலாக்காடு கிராம சேவகர் பிரிவில் முருக்கன்தீவு கிராமத்தில் வசிக்கும் திருமதி பரசுரான் நிஷாந்தினி (வயது – 20) தனது தலைப்பிரசவத்திற்காக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25ம் திகதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அப் பெண்னுக்கு ஏற்பட்ட சோக சம்பவத்தை இவ்வாறு தெரிவிக்கின்றார்.

நான் முருக்கன்தீவில் இருந்து எனது தலைப்பிரசவத்திற்காக வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு சென்றபோது அங்கிருந்த சரவணன் டொக்டர் நான் அவரிடம் கிளிக்கிற்கு போகாமல் சந்திவெளி ஆஸ்பத்திரிக்கி கிளினிக்கிற்கு போன என்பதற்காக இஞ்ச வராதங்க நீங்க சந்திவெளி ஆஸ்பத்திரிக்கே போங்க இல்லாட்டி மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கி போங்க என்று சொன்னார் எனது கிளினிக் காட்டைப் பாரத்துவிட்டு உடனே தூக்கி எரிஞ்சார் அதனால் நாங்க வீட்ட வந்து சந்திவெளி ஆஸ்பத்திரிக்கு போனபோது என்னை மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கி அனுப்பினாங்க.

நான் பிரசவத்திற்கு சென்ற காலம் மழை காலம் என்றபடியால் சரியான வெள்ளம் என்றபடியால் தோணியிலதான் போன எங்களுக்கு நடந்த சமபவம்பொல வேற யாருக்கும் நடக்கக்கூடாது என்றுதான் சந்திவெளி ஆஸ்பத்திரியில் கடிதம் எழுதிக் கொடுதN;தன் என்றும் சொன்னார்.

இச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண்னின் கணவரான ரீ.பரசுராமன் (வயது – 39) தொழில் கூலி வேலை செய்பவர் கருத்துத் தெரிவிக்கையில்.

எனது மனைவிக்கு முதல் குழந்தை கிடைப்பதற்காக நாங்க வாழைச்சேனை வைத்தியசாலைக்குச் சென்றிருந்தோம் அப்போது சரியான வெள்ளம் அதனால் மிகவும் கஸ்டப்பட்டுத்தான் போன நாங்க வாழைச்சேனை ஆஸ்பத்திரியில் இருந்த டொக்டர் அவரிடம் காட்டல என்றும் டிக்கட் வெட்டி விட்டுடாங்க வெள்ளத்தில் மிகவும் சிறமமப்பட்டு சந்திவெளி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் அனுமதித்து அங்கிருந்து மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய்தான் எங்களுக்கு குழந்தை கிடைத்த என்றும் தெரிவித்தார்.   

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை ஆலிம் வீதியில் வசிக்கும் நெய்னா முஹம்மது ஜெஸீமா (வயது – 37) என்பவர் தெரிவிக்கையில் தனது ஐந்தாவது பிரசவத்திற்காக வாழைச்சேனை அதார வைத்தியசாலையில் கடந்த 19.01.2015ம் திகதியன்று இரவு 08.00 மணியளவில் அனுமதிக்கப்பட்டேன்.

என்னை பரிசோதித்த இரவுக் கடமையில் இருந்த பெண் வைத்தியர் இப் பெண்னுக்கு பிரசவ வலி ஆரம்பித்துள்ளத என்றும் உடன் பிரசவ அறைக்குள் கொண்டு செல்லுமாரும் பணித்தார்.

கர்ப்பிணித்தாயை 'லிப்ட்' மூலம் பிரசவ அறைக்குள் கொண்டு சென்று அப் பெண் அணிந்திருந்த உடைகடை மாற்றி கட்டிலில் அமரும்படி சொன்ன கடமையில் இருந்த வைத்தியசாலை உத்தியோகத்தர் நீங்க யாரிடம் கிளினிக் போன என்று கேட்டுள்ளார்

அப்போது கர்ப்பிணித்தாய் நான் வீ.ஓ.ஜி. திருக்குமரன் சேரிடம்தான் காட்டின என்று சொன்னவுடன் வைத்தியசாலைஉத்தியோகத்தர்கோபப்பட்டு நீ இங்க ஏன் வந்த இது சரவனன் சேரின் வாட்டு அவரிடம் தனியார் வைத்தியசாலைகளில் காட்டியவர்களுக்கு மாத்திரம்தான் இடம் இவ்வாறு காட்டாதாவர்கள் இங்கு வரத்தேவையில்லை என்று சொல்லி வைத்தியசாலையை விட்டு உடனடியாக வெளியேரும்படி உத்தவு விட்டுள்ளார்.
இங்கு சரவன் சேரிடம் காட்டினால் மாத்திரம் தான் வர வேண்டும் இல்லா விட்டால் இங்கு வரத்தேவையில்லை என்று சொல்லி 'லிப்பிடில்' ஏற்றிய கர்ப்பிணித் தாயை படியால் இழுத்துக் கொண்டு வந்து கீழே விட்டு பரிசோதனை செய்த வைத்தியரிடம் இது சரவனன் சேரின் கேஸ் இல்லை ஏன் நீங்கள் அனுமதித்தீர்கள் என்று கடமையில் இருந்த பெண் வைத்தியரிடம் வைத்தியசாலை உத்தியோகத்தர் கேட்டுள்ளார்.

பெண் வைத்தியர் கொஞ்சம் பொறுங்கள் சேரிடம் கோல் எடுத்துக் கேட்டு விட்டு சொல்கிறேன் என்று கோல் எடுத்து சரவணன் சேர் கதைக்கிறார் கதைங்க என்று கர்ப்பிணித்தாயிடம் போனைக் கொடுத்துள்ளார் மறுமுனையில் கதைத்தவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் பரசோதனைக்கு வராமல் ஏன் என்ட வாட்டுக்கு நீ வந்த நீ எங்கயாவது போய் பிள்ளையைப் பெற்றுக் கொள் உடன் வைத்தியசாலையை விட்டு வெளியேறு என்று சொல்லியுள்ளார்.

அப்போது கர்ப்பிணத்தாய் நான் எங்கு சேர் போவேன் இது அரசாங்க ஆஸ்பத்திரிதானே நீங்க பார்க்கலாட்டடி என்னை அன்புலன்ஸ் மூலம் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கி அனுப்புங்கள் என்று சொல்லவும் கூடுதலாக கதைத்தாய் என்றால் உணக்கு ஊசி ஒன்று பொடச் சொல்வேன் உடன் வைத்தியசாலையை விட்டு வெளியெறு என்று சொன்னார்.

அப் பெண் வெளியேற முட்பட்ட போது வெற்றுக் கடதாசி இரண்டினைக் கொடுத்து இதில் கையொப்பம் இட்டுத்தரவும் என்று சொல்லியுள்ளார்கள் கையொப்பம் இட்டுத்தர முடியாது என்று கூறவும் கையொப்பம் இட்டால்தான் உனது கிளினிக காட்டைத் தருவோம் என்று கூறவும் கையொப்பத்தை விட்டுக் கொடுத்து விட்டு கிளினிக் காட்டைப் பெற்றுக் கொண்டு வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

மனைவியை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு வைத்தியசாலைக்கு வெளியே நின்ற பெண்னின் கணவரான முஹம்மது அசனார் நாசர் என்பவரிடம் இது தொடர்பாக கேட்ட போது.

வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு வெளியே நின்றேன் அப்போது அவர் அழுது கொண்டு வந்தா என்ன என்று கேட்டதற்கு நான் சரவணன் சேரிடம் காட்ட வில்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள் வேரு எங்காவது ஆஸ்பத்திரிக்குச் செல்வோம் என்று சொன்னா நான் அவவை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று இச் சம்பவம தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கு சென்ற போது கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீங்கள் வருத்தத்தோடு இருக்கின்றீர்கள் பிள்ளை பெற்றதன் பின் வந்து முறைப்பாடு செய்யுமாறு தெரிவித்தார்.
அதன் பின்னர் மீறாவோடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம் அங்கும் வைத்தியருர் இல்லை அன்புலன்சும் பலுதடைந்துள்ளது என்று சொல்லி எங்களை நாங்கள் போன வாகனத்திலயே மட்டக்களப்புக்கு போகும்படி கூறினார்கள் 

ஆட்டோவில் மட்டக்களப்புக்கு கொண்டு செல்லும் வழியில் பிரசவ வழி அதிகமாக இருந்ததால் இடையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதித்தோம். அங்கிருந்து உடனடியாக மட்டக்களப்புக்கு அனுப்பினார்கள் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உடனயே அங்கு பிரசவம் இடம் பெற்றது

எனது மனைவிக்கு பிரசவம் பிரயானத்தில் இடம் பெற்று தாய்க்கு அல்லது குழந்தைக்கு உயிர் ஆபத்து ஏதும் நடந்திருந்தால் யர் இதற்கு பொறுப்புக்கூறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஜனாதிபதி மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். 

இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மகப்பேற்று வைத்திய நிபுனர் டாக்கர் எஸ்.சரவணனிடம் தொடர்பு கொண்ட கேட்ட போது.

நான் கடந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி இருக்கிறேன் அதன் பின்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று நான்கு வருடங்கள் கடமையாற்றிவிட்டு தற்போத மீணடும் மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று கடமையாற்றி வருகின்றேன்.

நான் எனது மனச்சாட்சிக்கு விரோதமாக அல்லது எந்த கர்ப்பிணித் தாய்மாரையும் பாதிக்கும் வகையிலோ ஒரு நாளும் நடந்து கொள்ளவில்லை நான் எப்போதும் அம்மாவினதும் குழந்தையினதும் உயிரைப் பாதுகாப்பதையே எனது தொழில் தர்மமாக கொண்டு கடமையாற்றி வருகின்றேன்.

இச் சேவையை நூற்றுக்கு நூறு வீதம் செய்யாவிட்டாலும் கூட என்னாள் முடிந்தவரை தாயினதும் பிள்ளையினதும் உயிரைப்பாதுகாப்பதியே எனது தொழில் தர்மமாக கொண்டுள்ளேன் அதையே நேற்றும் செய்தேன் இன்றும் செய்கிறேன் நாளையும் செய்வேன்.

என்மீது சிலர் வீண் பழி சுமத்துகின்றனர் இதற்கு பல்வேறு உள்காரணங்கள் வெளிக்காரணங்கள் இருக்கலாம் ஆனால் இந்த உள்காரணங்களுக்கோ வெளிக்காரணங்களுக்கோ நான் பின்னிக்க மாட்டேன் எனது தொழில் தர்மத்தைப் பொறத்தவரை நேர்மையாகவும் மனச்சாட்சியாகவும் நடந்து கொண்டு இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். 

சேவைகளில் புனித சேவையாக கருதப்படும் வைத்தியத்துறையில் உள்ள ஒரு சில வைத்தியர்களும் அவர்களுக்கு கீழ் பணிபுரிபவர்களும் மனச்சாட்சியே இல்லாமல் ஒரு கர்ப்பிணித்தாயை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு நடந்து கொள்வார்கள் என்று சொன்னால் மனிதாபிமானம் எங்கு போய்விட்டது.

2 comments:

  1. Free education scholarship etc etc given by government since grade one upto university then job opportunity etc why this particular dr act like baberian?

    ReplyDelete
  2. Sorry in my court I will give them death penalty ! Doctors shouldn't threaten people like this. Patients trust the doctors more anyone.
    Specially if a lady is going to a male doctor she has to have emense trust in that doctor and if that doctor is behaving this way. He should be sacked from his position.
    And any doctor who has private clinic shouldn't be allowed to work in a government hospital.

    ReplyDelete

Powered by Blogger.