காத்தான்குடியில் ''ஷீஆக்கள்'' குறித்த மார்க்கச் சொற்பொழிவு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி லஜ்னதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று 15-03-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி டெலிகோம் வீதியிலுள்ள மஹ்ஹதுஸ்ஸூன்னா மகளிர் அறபுக்கல்லூரி வளாகத்தில் இடம்பெறற்றது.
இதன் போது ஷீஆக்களும் புரியப்பட வேண்டிய உண்மைகளும் எனும் தலைப்பில் மஹ்ஹதுஸ்ஸூன்னா மகளிர் அறபுக்கல்லூரி பிரதி அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.மன்சூர் (மதனி)யும் ,ஷீஆக்கள் ஒரு வரலாற்றுப் பின்னணி எனும் தலைப்பில் அஷ்ஷெய்க். ஏ.ஜீ.எம். ஜலீல் (மதனி)யும் விஷேட உரை நிகழ்த்தினர்.
இதில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், தஃவா அமைப்புக்கள் மற்றும் பள்ளிவாயல்களின் உறுப்பினர்கள், உலமாக்கள்; ,புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு ஷீஆக்கள் தொடர்பான காணொளிக் காட்சிகள் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அல்ஹம்துலில்லா மிக்க மகிழ்ச்சி. எமது அவா உங்களின் கருத்தரங்கின் முலம் முழு நாட்டு மக்களும் தெளிவு பெறவேண்டும்.
ReplyDeleteஇடு ஒரு நல்ல முயற்சி , இப்போது இலங்கையிலும் இவர்களின் ஆதிக்கம் அதிகம் குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து அதிகமான ஷியாக்கள் இலங்கைக்கு குடிபெயர்கின்றனர் இவர்களின் மதரசாக்கள் ஆரம்பிக்கபட்டு கல்வியும் புகட்ட படுகிறது , கொடுமை என்னவெனின் அதிகமான நம் இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் , ஷியாக்கள் என்று அறியாமல் அவர்களை பின்பற்றுகின்றனர். குறிப்பாக கப்ருகளை அழங்கரித்து வழிபடுதலும், சேகு மார்கள் எல்லாம் ஷியாக்களின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டவையாகும் .
ReplyDelete