Header Ads



முஸ்லிம் காங்கிரஸுடன், நரேந்திர மோடி பேச்சு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் உயர் மட்டக்குழுவினர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை (14) இரவு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து அதிகாரப் பகிர்வு, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கம் என்பன உட்பட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

அமைச்சர் ஹக்கீமுடன் கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹஸனலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கட்சியின் வெளிவிவகாரப் பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ்  ஆகியோர் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.

கிழக்கு மாகாணத்தில் விவசாய, கால்நடை அபிவிருத்தி, கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவித்தல், தென்கிழக்கு, கிழக்குப் பல்கலைக்கழகங்களில் பீடங்களை நிறுவதற்கும் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கும் உதவி வழங்கள் போன்றவற்றுக்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைக்குமென்று பிரதமர் மோடி தூதுக்குழுவினரின் வேண்டுகோள் சிலவற்றுக்கு பதிலளிக்கும் போது குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் முயற்சியினால் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து இந்தியப் பிரமதர் மோடி தம்மைச் சந்தித்த தூதுக்குழுவினரிடம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சந்திப்பின் இறுதியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம், தமது குழுவினரின் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனக் கூறினார்.

டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ், படங்கள்: துமிந்த சம்பத் (அமைச்சரின் ஊடகம்)



2 comments:

  1. தலைவர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் தயவு செய்து தாடியை வளருங்கள் நீதிபதி முதலமைச்சர் விக்கினேஷ்வரன் கூட தாடி வைத்திருக்கிறார் மோடியும் கூட

    ReplyDelete
  2. தாடி, இதுதான் இப்பொழுது பெரிய பிரச்சினையா? தயவு செய்து யதார்த்தமாக யோசியுங்கள். ஒரு முஸ்லிம் அரசியல் தலைவர் செய்ய வேண்டியpanikal எவ்வளவோ இருக்கின்றன. தாடி வைப்பது என்பது ஒருவரது தனிப்பட்ட முடிவு, அதனை இன்னொருவர் திணிக்க முடியாது. ஆபிரஹாம் லிங்கனும், விக்னேஷ் வரணும் கூட தாடி வைத்துத்தான் இருக்கின்றார்கள், ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

    ReplyDelete

Powered by Blogger.