Header Ads



இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை, பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்

இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான ஆறு நிபந்தனைகள் விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இரட்டைக் பிரஜாவுரிமை வழங்கப்பட உள்ளது. அதற்கமைய,

1, தொழில் தகைமைகள் அல்லது கல்வித் தகைமைகள் வைத்திருத்தல்.

2, இலங்கையில் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான சொத்துக்களை வைத்திருத்தல்.

3, இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கியொன்றில் 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட பணத்தை 3 ஆண்டுகள் நிலையான வைப்பாக பேணுதல்.

4, மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட ஏதாவது ஓர் வங்கியில் வெளிநாட்டு நாணயப் பெறுமதியில் 25000 அமெரிக்க டொலர்களை வைப்பாக பேணுதல்.

5, 25000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பிணைப்பத்திரங்களை வைத்திருந்தல்.

6, 55 வயதை பூர்த்தி செய்திருத்தல்.

ஆகிய தகுதிகளில் ஒன்றையேனும் கொண்டிருத்தல் வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீர்மானத்திற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க அமைச்சரவையில் அனுமதி பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.