சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தேர்தல் முறைமை சீர் திருத்தப்பட வேண்டுமானால் நாடாளுமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை 250 இற்கு மேலாக அதிகரிக்க வேண்டும்
சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தேர்தல் முறைமை சீர் திருத்தப்பட வேண்டுமானால் நாடாளுமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை 250 இற்கு மேலாக அதிகரிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தேர்தல்கள் ஆணையாளர் இந்த யோசனையை முன் வைத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் எதிர் கட்சித் தலைவர் நிமால் சிரிபால டீ சில்வா, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி உள்ளிட்ட பல கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதன்போது, தேர்தல் முறைமை சீர்திருத்தப்பட வேண்டிய விதம் தொடர்பான யோசனைகளை எதிர்வரும் 10 நாட்களுக்குள் தமக்கு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, தேர்தல்கள் ஆணையாளரை பணித்துள்ளார்.

கட்சிகளை பார்க்கக் வேண்டாம், நாட்டு நலனை மட்டும் பாருங்கள். இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டுக்கு ஏற்கனவே இருக்கும் MP தொகையே அதிகம், அதனை குறைக்கும் வழியை பாருங்கள்.
ReplyDeleteமாகாண சபை வேறு இருக்கிறது. ஆகவே அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை.
எல்லோரையும் திருப்திப் படுத்த வேண்டும் என்றால், 2 கோடி பேருக்கு பாராளுமன்ற அங்கத்துவம் கொடுக்க வேண்டி வரும்.