மேலதிகமாக 1000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைக்க உத்தேசம்
அடுத்த வருடம் முதல் மேலதிகமாக ஆயிரம் மாணவர்களை பல்கலைகழகங்களில் இணைத்துக்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
அதற்கமைய புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் எண்ணியுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிடுகின்றார்.
புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை பல்கலைக்கழகங்களுக்கு மேலதிக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக அனைத்து மாணவர்களும், தமக்குத் தமக்கு உரிய துறைகளில் உயர்கல்வியைப் பெற்று, பட்டதாரிகளாக மாரும் நிலை உருவாக வேண்டும். உதாரணமாக, பத்திரிகைத் துறை, தச்சுவேலை, களை வேலைப்பாட்டுடன் வர்ணம் பூசுதல், வாகன பழுதுபார்த்தல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்படல் வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமது துறைகளில் திறமையுள்ளவர்களாக உருவாக்கபப்டவும், அவர்களின் திறமை அங்கீகரிக்கப்படவும் வேண்டும்.
ReplyDeleteஇன்று பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் மத்தியில் தொழில் திறமை இல்லை, இதனால் பல்வேறு தரப்பினருக்கும் சிரமம் ஏற்படுகின்றது. பஸ் சாரதி, முச்சக்கர வண்டிச் சாரதி, ஹோட்டல் வெயிட்டர் என்று எவ்வித அளவுகோலும் இல்லாமல் தொழிலில் ஈடுபடுத்தப் படுவதால் பல்வேறு பிரச்சினைகள், தப்பபிப்பிராயங்கள் ஏற்படுகின்றன.