Header Ads



கிழக்கில் SLMC ஆட்சிக்கு நெருக்கடி - UPFA உறுப்பினர்கள் போர்க்கொடி, வாக்குறுதி மீறியதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண சபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்காக வழங்கிய ஒத்துழைப்பை மீளப்பெற்றுக் கொள்ளவிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். Hiru செய்திப்பிரிவுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆபிஸ் நசீர் அஹமட்டை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 14 மாகாண சபை உறுப்பினர்கள் எழுத்து மூல ஆதரவை தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி மாத்திரமே மாற்றம் அடையும் எனினும், மாகாண அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என்ற இணங்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளா.

எவ்வாறாயினும், கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் இருவருக்கான நியமன கடிதங்கள் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும், ஆரியவதி கலப்பதி கல்வி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீடமைப்பு மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதிவப்படுத்தும் எம்.ஐ மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கு முதலமைச்சர் பதவியுடன், அமைச்சுப் பதவி ஒன்றும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு ஒரு அமைச்சுப் பதவியும் கிடைக்கிறது.

ஆனால் இதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க உள்ளிட்ட சில உறுப்பினர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தாங்கள் கிழக்கு மாகாண சபையில் எதிர்கட்சியாக செயற்பட தீர்மானித்துள்ளதாக விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.