Header Ads



NFGG + PMJD இற்கு ஒரு திறந்த மடல்..!

-I.M Azeem Akurana-

இக்கட்டுரையின் நோக்கம் எமது முஸ்லிம் சமூகத்தின் கண்டி மாவட்ட அரசியல் எதிராகலத்தைப் பற்றியதே இக்கருத்தில் இருக்கும் நாம் அரசியலில் ஒன்றும் எதிர்பார்க்கவும் இல்லை, முஸ்லிம் காங்கரஸ் போராளியும் இல்லை என்பதை உறுதிபட கூறிகொள்கிறேன்.

NFGG மற்றும் PMJD ஆகிய இரண்டு கட்சிகளையும் விரும்புபவன் என்ற வகையில் நீங்கள் விடும் சில பிழைகளையும் சுற்றிகாட்ட கடமைப்பட்டுள்ளேன், உங்களது கட்சியின் அரசியல் பிரவேசம், உங்களது கட்சியின் கொள்கை, எதிர்கால நோக்கு என்பவற்றில் உடன்பாட்டுடன் இருப்பவன் என்ற வகையில் இந்த மடலை எழுதுகிறேன் உங்களது இரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதாக அறிந்து மகிழ்ச்சியடைந்தேன் அல்ஹம்துலில்லாஹ்.

சென்ற வாரம் மடவளை நியூஸ் மற்றும் ஜப்னா முஸ்லீம்ஸ் போன்ற இணையதளங்களில் இடம்பெற்ற வாத பிரதிவாதங்களை மையமாக கொண்டே இக்கட்டுரையை வரைகிறேன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்திற்கு மு.கா தலைவர் ரவூப் ஹகீம் தேவையா?  இல்லையா? என்பதே அதன் சுருக்கம்.

ரவூப் ஹகீம் கண்டிக்கு தேவை இல்லை என்பதை பொது மக்கள் சார்பாக வெளியிடப்பட்ட கருத்தாக நான் பார்கவில்லை மாற்றமாக PMJD மற்றும் NFGG போன்ற அரசியல் கட்சிகளின் சொந்த கருத்தாகவே பார்க்க முடிந்தது பல்வேறு விடையங்களில் சிந்தனையுடனும், தூர நோக்குடனும், உண்மையுடனும் செயற்படும் உங்களது இயக்கங்கள் நீங்கள் போட்டியிட நினைக்கும் இடங்களில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை, பெரும் அரசியல் தலைவர்களை வேரறுத்து விட்டு உங்களது அரசியல் சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் மறைந்திருப்பதை கண்கூடாக காணக்கிடைப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

நாம் விரும்பியோ விரும்பாமலோ முஸ்லிம்களுக்கு பெயர் சொல்ல கூடிய தலைவர்கள் வரிசையில் (மறைந்த ஹமீட் மற்றும் அஷ்ரப்) ற்கு பிறகு ரவூப் ஹகீம் மூன்றாவது இடத்தை பிடிக்கிறார், ஏனைய இரண்டு தலைவர்களுடன் ஒப்பிடுகையில் ஹகீம் சற்று தரம் குறைந்தவராக காணப்பட்டாலும் உலக நாடுகள் உட்பட அனைத்து மாற்று மத தலைவர்களும் ஹகீமை முஸ்லிம்களின் பெரும் தலைவராக பார்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது

முஸ்லிம்களை அவர்களது பூர்வீகத்தையும் சிதைக்க நினைக்கும் மாற்று மத தலைமைக்கு மத்தியில் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டிய இந்த காலகட்டத்தில் மீண்டும் எமது சமுதாயற்கு இப்படி ஒரு தலைவரை உருவாக்க பல தசாப்தங்கள் ஆகும் என்ற நிலையில் நமக்கு இருக்கும் தலைமைகளை நாமே தூற்றி ஓரம் கட்டுவதா?

நான் PMJD கட்சியை உண்மைக்கும் நல்லாற்ச்சிக்குமான கட்சியாகவே பார்த்து வந்தேன் இருப்பினும் கடந்த பிரதேச சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் உடன் இணைந்ததால்  உங்களது கட்சியில் இருந்து இரண்டு அங்கத்தவர்களை பிரதேச சபைக்கு அனுப்ப முடிந்ததை மறந்து விடவேண்டாம், தனித்து போட்டியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நான் சொல்லி தான் நீங்கள் தெரிய வேண்டியதில்லை அப்படி இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் இன் முதன்மை வேட்பாளரான முஹ்சின் ஹாஜியாரின் மரணத்தின் பின்பு நீங்கள் நடந்து கொண்ட விதம் உங்களிடம் நீதி நேர்மை இல்லையோ என்ற ஒரு கேள்வி தான் பலரது மனதிலும் ஆட்கொண்டது காரணம் மறைந்த முஹ்சின் ஹாஜியாரின் இடத்திற்கு அடுத்த இடத்தில் இருந்த உங்களது வேட்பாளரையே அங்கதவராக்க வேண்டும் என்ற உங்களது வாதம் எந்தவிதத்தில் நியாயம் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ள்ளது (ஒரு தனிகட்சிக்கு இந்த நிலை வந்தால் மாத்திரமே அடுத்த இடத்தில் உள்ளவரை பிரதிநிதிதுவப்படுத்தலாம் மாற்றமாக ஒரு பிரதான கட்சியுடன் இனைந்து போட்டியிட்ட நிலையில் அக்கட்சியின் பிரதிநிதிக்கு பதிலாக உங்களது கட்சிகார் பிரதிநிதியாய் வரவேண்டும் என்ற எண்ணம் உங்களது கட்சியின் நீதி நேர்மை என்ற பெயரின் அர்த்தத்தில் அடங்குவதாக தெரியவில்லையே?

அரசியல் என்ற வயலில் உங்களது கட்சி மாத்திரம் பயிர் என்றும் ஏனைய கட்சிகள் அனைத்தும் களைகள் என்று எண்ணி பிடுங்கி ஏறிய நினைப்பது நீங்கள் அரசியல் குழந்தைகள் என்பதை தான் காட்டுகிறது.

ரவூப் ஹகீம் கண்டிக்கு வேண்டுமா? வேண்டாமா? என்ற தீர்மானிக்க வேண்டியது மக்களே அன்றி அரசியல் கட்சி கிடையாது காரணம் ரவூப் ஹக்கீமும் கண்டியை சேர்ந்தவர் தான், ரவூப் ஹகீமை கண்டியில் கேட்கவேண்டாம் என்று சொல்லும் நீங்கள் அசாத் சாலி கண்டிக்கு வேண்டுமா? வேண்டாமா?  என்பதில்  ஏன் மௌனம் காக்கிறீர்கள் என்பது புரியாத புதிரே! மாகான சபையில் அசாத் சாலியை மக்கள் மத்தியில் உயர்த்தி காட்டி அக்குரனையின் பலம் பெரும் அரசியல் வாதிகளை (முன்னாள் மாகான சபை உறுப்பினர்கள் ஷாபி ஹாஜி, சகோதரர் ரிஸ்வி) உட்பட பலரை கவிழ்த்து விட்டதை மக்கள் மறந்து விட்டார்களோ என்னவோ?

NFGG மற்றும் PMJD ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் எனது பணிவான வேண்டுகோள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கு தகுந்த ஒரு அரசியல்வாதியை இனம் கண்டு மக்கள் முன் நிறுத்துங்கள், அதன் பிறகு ஹகீம் வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விக்கு விடை தேடுவோம் மாற்றமாக எங்களுக்கு இருக்கும் பெரும் அரசியல் தலைவர்களை ஓரம் கட்டி விட்டு மாற்று மத சகோதரர்களை பதவியில் அமர்த்துவதால் உங்களுக்கோ மக்களுக்கோ எந்த பயனும் இல்லை, எங்களது பொன்னான வாக்குகள்  சீரழிந்து சின்னாபின்னமாகும் என்பது மாத்திரம் உறுதி.

(NFGG கடந்த ஜனாதிபதி தேர்தலில் தான் அக்குரனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதாக எண்ணுகிறேன் எனவே இக்கட்டுரையின் ஒரு சில விமர்சனங்கள் மாத்திரமே உங்களை நோக்கியது மற்ற அனைத்து குற்றச்சாட்டுக்களும் PMJD யை நோக்கியே என்பதை தாழ்மையாய் கூறிகொள்கிறேன் - ஜசாகல்லாஹ்)

4 comments:

  1. What ever party or group organized by people that has to be public service purpose not for self gain ,behind the influence or wealthiest people ,be straight and do maximum developments throu goverment

    ReplyDelete
  2. Brother I M Azeem, There are two misconceptions in your article. 1, NFGG and PMJD are not together. 2,PMJD was never asking for the the vacant seat created by Muhusin Hajiar instead pressed Minister Hakeem to deliver what he himself committed to the people of Akurana Exp. Akurana Balika
    My point is instead of thinking and writing about PMJD or NFGG at this juncture is a waste of time.So think and write something useful to the community.
    It is up to Minister Hakeem and Minister Haleem to see and ensure at the top only to field a maximum of 4 Candidates to the Kandy District Coz.The Equation is:- More the Candidates less the MPs.
    Minister Hakeem can introduce the next layer for the Kandy District who shall stand upto to be groomed as good leader in the future to Kandy. and as the National Leader Minister Hakeem can win in any District in the east.
    Minister Haleem has already in the winning list as has the roots in Harispathuwa

    ReplyDelete
  3. Dear Bro. Azeem,
    I'm from the east. Your writing is rather disappointing as you have claimed that Mr Rauf Hakeem is one of the great leader, nationally and internationally recognised. you know -- the party, SLMC has the power not its leader. Any intellectual who becomes the leader of the party will do the job easily as the weights lay on the party. By the way our experience with leadership of Mr Hakeem gives us more disappointing than satisfaction. So if you need to do the propaganda for him this manner - do it but better stop advising other party while you're naiive in the subjects of SLMC leadership and it's actions.

    ReplyDelete
  4. Why would not you research before writing?
    NFGG is nothing to to do with PMJD. But PMGG is part of NFGG. But PMGG is nothing to do in akurana. If you dont understand the above i would rather doubt of your ablity to write a political article.

    Your statements are you are PMJD NFGG supporter but u didnt know those two not working together and Rauff Hakeem is a great leader.. thats shows where r u coming from. Good luck.

    ReplyDelete

Powered by Blogger.