வெளிநாடுகளில் பணியாற்றும், இலங்கையர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்
-nf-
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு வருடங்கள் வெளிநாடுகளில் தொழில்புரிந்துவிட்டு நாடு திரும்பியதன் பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.வித்தானகே கூறியுள்ளார்.
உத்தேச திட்டம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment