IS க்கு எதிராக விரைவில், மாபெரும் ராணுவத் தாக்குதல்
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) இராக்கில் கைப்பற்றியுள்ள பகுதிகளை மீட்க மாபெரும் ராணுவத் தாக்குதலை இன்னும் சில வாரங்களில் இராக் ராணுவம் மேற்கொள்ளவிருப்பதாக, ஐ.எஸ்.ஸூக்கு எதிரான சர்வேதேசக் கூட்டுப் படையின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் ஜான் ஆலன் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
இதுகுறித்து ஜோர்டான் அரசு செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி: இராக்கில் ஐ.எஸ். மீது இன்னும் சில வாரங்களில் மாபெரும் தரைவழித் தாக்குதல் நிகழ்த்தப்படும். இந்த நடவடிக்கைகளில் முழுக்க முழுக்க இராக் ராணுவமே ஈடுபடும். கூட்டுப் படைகளைப் பொருத்தவரை, இராக் ராணுவத்தின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.
Post a Comment