IS ஏற்படுத்திய விபரீதம் - வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத பிறந்தநாளாம்..!
திடீரென அதிரடியாக உங்கள் வீட்டிற்குள் நுழையும் போலீசார் ஒரு ‘சாரி’ சொல்லி, சிரித்துவிட்டுப் போனால் எப்படியிருக்கும்?
குழப்பமாக இருக்கிறதா, ஸ்வீடனின் பெக்லிஞ்ச் கவுண்டியில் உள்ள கர்ல்ஸ்க்ரோனா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. கூடவே அதை உறுதி செய்யும் ஒரு புகைப்படமும் வந்தது. அதில் அந்த வீட்டுக்குள் ஐ.எஸ். என்ற வடிவத்தில் பலூன் ஒன்று இருந்தது.
இதுபோதுமே அவர்களுக்கு, ஐ.எஸ். என்றதும் ஆயுதங்களுடன் விரைந்த ஸ்வீடன் போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்தனர். கதவைத் திறந்த அடுத்த நொடியே சிரித்து விட்டனர். அந்த வீட்டிற்குள் இருந்த மாணவியும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தார். உள்ளே வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, அங்கு வசிக்கும் மாணவி தனது 21-ம் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக 21 என்ற வடிவத்தில் உள்ள பலூனை தனது அறையில் வைத்துள்ளார்.
வெளியிலிருந்து அதைப் பார்ப்பவர்க்கு ஐ.எஸ். என்பது போல் தெரிந்ததால் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். எது எப்படியோ தனது 21-ம் பிறந்த நாளை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது என்கிறார் அந்த மாணவி.
Post a Comment