IS இஸ்லாமியர்கள் அல்ல, சாத்தான்கள் - செசன்ய ஜனாதிபதி
செசன்ய அதிபர் ரம்ஜான் கதிரோவ் பத்திரிக்கைக்கு பரபரப்பான பேட்டியைக் கொடுத்துள்ளார். ரஷ்ய செய்தி ஸ்தாபனமான டாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அதிபர் ரம்ஜான் கதிரோவ் சொன்னதாக வந்துள்ளதாவது:
'நான் உலக மக்கள் அனைவரிடத்தும் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரை இஸ்லாமியர் என்று சொல்லாதீர்கள். அவர்கள் சாத்தான்கள். அவர்களின் எண்ணம் எல்லாம் எந்த வகையிலாவது பணம் பண்ண வேண்டும் என்பதே. மேற்குலக நாடுகளின் கட்டளைக்கு கீழ்படிந்து இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்துவதே அவர்களுக்கு இடப்பட்ட பணி. தங்கள் பணியை இன்று வரை கச்சிதமாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் மறைமுகமாக மேற்குலக நாடுகளால் தாராளமாக தரப்படுகின்றன. ஆயுதங்கள், உடைகள், நவீன சாதனங்கள் எல்லாம் எங்கிருந்து இவர்களுக்கு கிடைக்கின்றன? யாரை திருப்பதிபடுத்த இவர்களின் இந்த வெறியாட்டம்?
கல்லூரிகள், பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள் அனைத்திலும் இந்த கொடியவர்களின் உண்மை முகத்தைப் பற்றிய தெளிவினை விளக்கி பாடம் எடுக்க வேண்டும். இளைஞர்களின் மத்தியில் இந்த சாத்தான்களின் கொடூர குணம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.ஒவ்வொரு வீட்டிலும் இணைய தொடர்பு உள்ளது. இந்த தொடர்பின் மூலம் இந்த கொடியவர்களின் நடவடிக்கை இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது. இஸ்லாம் இதனை முஸ்லிம்களுக்கு கற்றுத் தரவில்லை என்ற உண்மையை எடுத்துச் செல்ல வேண்டும். இது நம் அனைவரின் மீதும் சுமத்தப்பட்ட கடமையாக நினைத்து செயலில் இறங்க வேண்டும்' என்று காட்டமாக அறிக்கை விட்டுள்ளார்.
தரகவல் உதவி:
மொராக்கன் டைம்ஸ்
சுவனப் பிரியன்
மிகவும் உண்மையான பேச்சு வழ்க
ReplyDelete